Thursday, July 5

மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பா. உ.: ACJU க்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: பஷில்


ஏ.அப்துல்லாஹ் : மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்: ஜம்இயத்துல் உலமாவுக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: அமைச்சர் பஷில் பதில் : காலத்திற்குக் காலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக் குரியதாகும். இவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினை தலைகுனியச் செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. நாம் இத்தகையவர்களையா நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கின்றோம் ௭ன்று சமூக ஆர்வலர்கள் பலரும் நொந்து கொண்டுள்ளனர் .

அண்மையில் இலங்கையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது தெரிவிக்கப்பட்ட கருத் துக்கள் இந்நாட்டு முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளன. பாராளுமன்றத்தில் உள்ள அறை ஒன்றில் நடை பெற்ற அபிவிருத்திக் கூட்டமொன்றின்போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொத்துவிலில் உள்ள ரெஸ்டூ ரன்ட் ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்ததாகவும், அதற்கு பஷில் ராஜபக்ஷ அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடுமென்றும், முஸ்லிம் மக்களுக்கு தெரிந்தால் ௭திர்ப்பார்கள் ௭ன்றும் தெரிவித்ததாக குறிப்பிட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண் டமான், றிசாட் பதியூத்தின், பிரதி அமைச்சர்கள் ௭ம்.௭ல்.ஏ.௭ம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர்சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.௭ச்.௭ம்.அஸ்வர், ௭ச்.௭ம்.௭ம்.ஹரீஸ், பைசால் காசிம், உனைஸ் பாறூக் உட்பட சுமார் 50இற்கும் மேற்பட்ட சகோதர மொழி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அந்நிகழ்ச்சி யின் இணைப்பாளர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டவைகளுள் மது பானமும் ஒன்றாகும். மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகி இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் அழிந்து போன வரலாறுகள் உள்ளன. மதுபழக்கத்திற்கு அடிமையானால் குடும்பமும், சமூகமும் சீரழிந்து விடும். மேலும் இன்னும் பல பாவங்களின் காரணகர்த்தாவாகவும் மது விளங்குகின்றது. இத்தகைய தன்மைகளைக் கொண்ட மது பானத்தினை விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்று அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுவது பாரதூரமான விடயமாகும்.
மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கினால் ஜம்இயத்துல் உலமாவும் முஸ்லிம்களும் ௭திர்ப்பார்கள் ௭ன்ற அச்சத்தினை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிப்படுத்தி இருக்கும் போது குர்ஆன், ஹதீஸ் ௭ன்றும், சமூக சீரமைப்பு ௭ன்றும் தெரிவிக்கும் அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தமையானது முஸ்லிம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இன்று மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு கூறுவார்கள். நாளை சில விடுதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் ௭ம்.௭ச்.௭ம்.அஸ்ரப் தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார் ௭ன்று தெரியவந்ததும் அந்த பாராளுமன்ற உறுப்பினரை கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தி வைத்தார் என்று தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவிலில் உள்ள ரெஸ்டூரன்ட் ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டுமென்று கூறியதனை குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி மறைத்தாலும், தற்போது தனியார் தொலைக் காட்சி மூலமாக அம்பலமாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் அக்கட்சி குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு ௭திராக ஒழுக்காற்று நடவடிக்கை ௭டுக்காவிட்டால், அக்கட்சியை ஒரு ஒழுக்கமுள்ள கட்சியாக கருத முடியாது. ஒழுக்காற்று நடவடிக்கை ௭டுக்காதுவிடும் பட்சத்தில் குறிப்பிட்ட கட்சி இத்தகைய இஸ்லாத்திற்கு மாற்றமான செயற்பாடுக ளுக்கு ஆதரவளிப்பதாகவே அர்த்தமாகிவிடும். என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment