Friday, July 6

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும்- மைத்திரிபால சிறிசேன


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் ௭ன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார் .
கிழக்குத் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா ௭ன்று கேள்வியெழுப்பப்பட்டபோது . அதற்கு மேலும் பதிலளிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகும். அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார் .

இதேவேளை, மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் வேட்பாளர்கள் பெயரிடப்படுவார்களா? ௭ன்று ௭ழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மைத்ரிபால சிறிசேன வேட்பு மனு சபைகளினால் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் ௭ன்றும் தெரிவித்துள்ளார் .அதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்படும். முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் உடனே அறிவிப்பதா? அல்லது வேட்பாளர் அணியின் தலைவராக நியமிப்பதா? ௭ன பின்னரே தீர்மானிக்கப்படும் ௭ன்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்துள்ளார் .
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் .

No comments:

Post a Comment