from: Kattankudi.info
இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை
பாதுகாத்து பேணும் நோக்கில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார
பிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களால் காத்தான்குடியில்
அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 2013
பெப்ரவரி மாதம் 1ம் 2ம் 3ம் திகதிகளில் கலாசாரக் கண்காட்சி ஒன்று
பிரதேசசெயல ககலாசார பிரிவினால் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய
தேசிய பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை
6.00மணிவரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இக் கண்காட்சியில் வரலாற்றுப்பழைமைவாய்ந்த
நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுபாவனைப்பொருட்கள், நாணயங்கள்,
கல்வெட்டுக்கள், பாரம்பரியவிவசாயம், மீன்பிடிகைத்தொழில்கள், மருத்துவம்,
சடங்குகள், தொடர்பாடல் முதலியகருவிகள் , உபகரணங்கள், வாழ்வியலை
புலப்படுத்தும் அம்சங்கள் என்பன இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை
வெளிப்படுத்தும் இக்கண்காட்சியினை கண்டுகளிக்க வருமாறு அனைவரையும்
காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவினர் அன்புடன் அழைக்கின்றனர்
A
No comments:
Post a Comment