அமைச்சரவை மாற்றத்தின் போது தான் வகித்து வருகின்ற நீதி அமைச்சுக்குப்
பதிலாக வேறொரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறு ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை ஜனாதிபதியினால்
நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அவர் உள்ளடக்காப்படவில்லை.
அதேவேளை பஷீர் சேகுதாவூதை அமைச்சரவை அமைச்சராக நியமிப்பது தொடர்பில்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கருத்துக் கோரப்பட்ட போது அதனை
அவர் வன்மையாக ஆட்சேபித்திருந்தார்.
ஒரே கட்சிக்குள் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது தலைமைத்துவ
போட்டியையும் வேறு சில சிக்கல்களையும் உருவாக்கி விடும் என்று முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரான பஷீர் சேகுதாவூத் இன்று அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அத்துடன் தமது கட்சிக்கு மூன்று பிரதி அமைச்சர்கள் வழங்கப்பட வேண்டும்
என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்.
ஆனாலும் அக்கோரிக்கை கணக்கில் எடுக்கப்படவில்லை என்று அறிய முடிகிறது.
ஆனாலும் அக்கோரிக்கை கணக்கில் எடுக்கப்படவில்லை என்று அறிய முடிகிறது.
இத்தகைய காரணங்களைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
இன்றைய அமைச்சர்கள் சத்தியப்பிரமான வைபவத்தை புறக்கணித்துள்ளார்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் இந்தியா
சென்றுள்ள அவர் நேற்று இரவு நாடு திரும்பவிருந்தார். எனினும் தனது
கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது வரவை பிற்போட்டு
இன்றைய அமைச்சர்கள் சத்தியப்பிரமான வைபவத்தை புறக்கணித்துள்ளார்.எனத்
தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment