Thursday, January 31

அம்பாரை மாவட்டத்தில் மகா போக விவசாய அறுவடை ஆரம்பமாகியுள்ளது.


இம்மாவட்டத்திலுள்ள சுமார் 164,500 ஏக்கர் காணிகளில் இம்முறை சுமார் 140,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

சீரற்ற கால நிலையில் நெற்பயிர்கள் சேதத்துக்குள்ளான போதும் தற்போதைய நிலவரப்படி ஏக்கர் ஒன்றின் அறுவடையாக 75 புசல் தொடக்கம் 110 புசல் வரை கிடைக்கின்றது.


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனயான்குழி, கொச்சிக்காய்ச்சேனை, மருக்குளம், வெள்ளக்காள் தோட்டம், கரடிக்குளம், வளளவாய்க் கண்டம், மடத்து வெளி, அல்மந்தா குளம், குடாக்கரை கிழல், ஆலங்குளம் போன்ற விவசாய பிரிவுக் காணிகளில் அறுடை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இம்மாவட்டத்தில் சீரான கால நிலை தற்போது காணப்படுவதனால் பரவலாக எங்கும் அறுவடை வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான வயல் நிலங்களில் அறுவடை இயந்திரம் மூலமே அறுவடை நடைபெற்று வருகின்றது. 65 கிலோ எடைகொண்ட சுத்திகரிக்கப்பட்ட  ஒரு மூடை நெல் 1700 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை விற்பனையாகின்றது. நெல் மூடைக்கான விலை ஆதிகரிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொலனறுவை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களிலுள்ள அரிசி ஆலை சொந்தக்காரர்கள் நெல் கொள்வனவு செய்வதற்காக  இம்மாவட்டத்துக்கு லொறிகள், கென்ரர்களுடன் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

No comments:

Post a Comment