கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு கண்காணிப்பாளர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண சபையில் எந்தவித பதவிகளும் வகிக்காத ஆளும் கட்சியின் 15 உறுப்பினர்களுக்கே இந்த கண்காணிப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசாங்கத்தில் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை போன்றே கண்காணிப்பு மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இவர்களுக்கான நியமன கடிதங்கள் முதலைமச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்த கண்கானிப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளத்திற்கு மேதிகமாக 40,000 ரூபா மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.
இவர்களுக்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள திணைக்களங்களின் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், பின்னடைவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிக்கையினை முதலமைச்சருக்கு மாதாந்தம் சமர்ப்பிக்க வேண்டும்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கியுள்ள திணைக்கள விபரம்
No comments:
Post a Comment