Sunday, February 17

சம்மாந்துறையின் முதல் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை


5சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் முதல்  முதலாக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண் குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நேற்று (16) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலேயே இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான மருதமுனை டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீமினால் இச்சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது.
கல்முனைப் பகுதியைச் சேர்ந்த இச்சிறுவன் கல்முனையிலுள்ள வைத்தியசாலை ஒன்றினால் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சத்திர சிகிச்சைக்கான காலம் இழுத்தடிக்கப்பட்டு வந்த சூழ்நிலையிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான சத்திர சிகிச்சையை கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்வதாயின் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் செலவாகும் என்று கூறப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment