(சமீம் சாஜித்)
கல்முனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பாண்டிருப்பு, பெரியநீலாவணை
கிராமங்களில் பல் வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை பிரதேச சிவில்
பாதுகாப்புக் குழு, கிராம
அபிவிருத்திக் குழு, சமூகசேவை அமைப்புக்கள்
போன்றவற்றுடன் இணைந்து இரண்டு வாரங்களாக நடாத்தியது. டெங்கு ஒழிப்பு
சிரமதானம், வீதி சிரமதானம், சூழலை சுத்தப்படுத்துதல் பொதுமக்கள் பிரச்சினை
போன்ற வேலைத்திட்ங்களையும் முன்னெடுத்து வந்தது.
இந்த வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் பெரியநீலாவணை Red Crosse சுனாமி வீட்டுத்திட்ட திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழகாட்டலுடன் பொலிஸ்
சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டத்தின் ஒருகட்டமாக
நடைபெற்ற இந்த நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள்,
விளையாட்டு வீர்ர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் பாராட்டப்பட்டு
சாண்றிதழ்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்
கொளரவ பூஜித்த ஜெயசுந்தர கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபர் எம்.ஐ.கருணாரட்ண, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஜெயந்த நாணயக்கார, கல்முனை மாநகர சபை முதல்வர் Dr. சிறாஸ் மீராசாஹிப்,
கல்முனை பிரதேச செயலாளர் ஜனாப் எம்.எம்.நௌபல், கல்முனை தமிழ் பிரதேச
செயலாளர் திரு கே.லவநாதன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
உட்பட சமயத்தலைவர்கள் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலாச்சார, சமய, விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இசைநிகழ்ச்சியும் அன்றயதினம் இடம்பெற்றது.
No comments:
Post a Comment