கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை
இடமாற்றுமாறுகோரி இன்று (16) காலை வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றது.
கல்முனை தமிழர் சமூக சீர்த்திருத்த அமைப்பு மற்றும் தமிழர் இளைஞர் அணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு வருடங்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கும் வைத்திய அத்தியட்சகர் இனரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும், தமிழ் வைத்தியர்களை பதிலீடுகள் இல்லாமல் இடமாற்றம் செய்வது, சம்பள ஏற்றத்திற்காக செல்லும் தமிழ் உத்தியோகத்தர்களை தேவாரம் பாடுமாறு வற்புறுத்துவது, சயரோக பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் உபகரணத்தை முறையற்ற விதத்தில் சம்மாந்துறை சயரோக பிரிவிற்கு மாற்றியது போன்ற பல காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இவ்வைத்தியசாலையிலிருந்து வெளியேறுமாறு கோரியுமே இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆர்ப்பர்த்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்ஙள் அடங்கிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் காணப்பட்டனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அவ்விடத்திற்கு விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கையளிக்கப்பட்டது.
இதனை கையேற்ற பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment