Monday, April 29

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தின் ஆக்கபூர்வமான பேச்சு; ஊரின் நலன் கருதி வீதி அபீவிருதி வழக்கு வாபஸ்!


SAM_6778நிந்தவூர் மத்திய வீதியின் புணர் அமைப்பு தடைகள் பைசால் காசிம் அவர்களின் முயற்சியினால் நீக்கம்!
வீதி விரிவாக்கத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்கு வாபாஸ் பெறப்பட்டது!
வீதியோர மதில் அமைப்பு பணிகளில் நிந்தவூர் ஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாகம் களத்தில்!
நிந்தவூர் மத்திய வீதி அபிவிருத்தி திட்டமானது சென்ற வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூரின் பிரதான வீதியில் இருந்து கடற்கரை வரையிலான சுமார் 1.5 கி .மீ .தூரமுள்ள இவ் வீதியின் புனர் அமைப்புக்கு உலக வங்கி நிதியளிப்பு செய்திரிந்தது.

ஆகக் குறைந்த விதியின் அகலமாக 6 மீட்டர் தீர்மானிக்கப்பட்டது .சுமார் 50% மான புனர்  அமைப்பு பணிகள் முடிக்கப் பட்டிருக்கும் வேளையில் குறித்த வீதியில் உள்ள சில பொது மக்கள் தங்களின் நலனில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டு கல்முனை மாவட்ட நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர் .இதனால் இவ் வீதியின் புனர் அமைப்பு பாதிக்கப்பட்டது.
இவ் வேளையில் உடன் நடவடிக்கயில் இறங்கிய நிந்தவூர் ஜும்மஹ் பள்ளிவாசல் நிருவாகத்தினர் குறித்த வீட்டுச் சொந்தக்கரர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பயனாக வழக்காளிகள் ஊரின் நலன் கருதி இது சம்மந்தபட்ட வழக்கினை மீளப் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் வீதி அகலமாக்கல் காரணமாக அகற்றப் படும் வீதியோரச் சுவர்களினை மீண்டும் நிர்மாணித்துக் கொடுக்கும் பொறுப்பினை ஜும்மாஹ் பள்ளிவாசல் நிர்வாகம் மேற் கொள்ளுமாறு கௌரவ .பாராளுமன்ற உறுப்பினர்களான MT .ஹசன் அலி அவர்களும் ,பைசால் காசிம் அவர்களும் வேண்டிக் கொண்டதுடன் அதற்கு தேவையான அணனத்து நிதியினையும் இவர்கள் தங்களின் ஒதுக்கீடு நிதிதியின் மூலம் பள்ளிவாசல் நிருவாகத்துக்கு வழங்கியுள்ளனர்.
இவ் வீதியின் புனர் அமைப்புக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பூர்த்தியான நிலையில், உலக வங்கியினால் இவ் திட்டத்தினை மீண்டும் தொடரவைக்கும் பகீரத முயற்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அண்மையில் இவர் இது சம்மந்தமாக கௌரவ கிழக்கு மாகாண முதல் அமைச்சர், மாகாண பிரதம செயலாளரினையும் சந்தித்து சாதகமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுடன், இவ் வீதி அபிவிரிதியுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் உள்ளூராச்சி மாகாண சபைகள் அமைச்சுக்களுடன் காத்திரமான முன்னடுப்பபுகலினை மேற்கொள்வதாகவும்  மேலும் எதிர் வரும் வாரத்தில் உலக வங்கி பிரதி நிதிகளுக்கும் கௌரவ .பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களுக்கும் இடையிலான ஓர் உயர் மட்ட கூடத்துக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் கௌரவ .பாராளுமன்ற உறுப்பினரரின் பிரத்தியேக செயலாளர் MMM. அன்சார் அவர்கள் இது தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கயையில் தெரிவித்தார்.
நிந்தவூரின் மத்திம பிரதேசத்தின் மேற்கு கிழக்காக ஊடறுத்து செல்லும் இவ் வீதியின் பயன் பாடனது அதி முக்கியத்துவம் கொண்டதாகும். இவூரின் பெரிய பள்ளிவாசல், மாவட்ட வைத்திய சாலை, காசிபுல் உலூம் அரபிக் கல்லுரி, பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரி, பிரதேச சபை, பெண்கள் உயர் தரப் பாடசாலை ,மற்றும் பல தைக்காப் பள்ளிவாசல்களும் இவ் வீதியில் அமையப் பெற்றுள்ளன, மட்டுமன்றி இவ் ஊரின் அனைத்து பிரதான குறுக்கு வீதிகளினையும் தொடர்பு படுத்தும் இவ் வீதியானது நிந்தவூர் பிரதான சந்தை தொகுதி மற்றும் அஸ்ரப் சதுக்கத்தில் உள்ள பொது விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து அரச நிறுவனகளினையும் சென்றடைவதட்கான பிரதான பாதையாகவும் இது அமைந்துள்ளது .
சென்ற 2004 சுனாமி அனர்த்தத்தின் பொழுது பெரும் பாலான மீனவ சமூக குடும்பங்கள் தங்களினை பாதுகாக்கும் பொருட்டு இவ் வீதியினை பிரதான வெளியேறும் பாதையாக (Exit Point ) பயன்படுத்தியது குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment