Friday, May 24

சாய்ந்தமருதில் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் முறுகல்


சாய்ந்தமருதில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் இன்று முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. ஆற்று மண் ஏற்றிய வந்த மாட்டு வண்டிகள் இரண்டை பொலிஸார் மடக்கிப் பிடித்ததையடுத்தே   பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் இந்த முறுகல் நிலை  உருவானது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு இன்றுக்காலை கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மணல் ஏற்றிவந்த வண்டிகள் இரண்டையும் பொலிசார் கைப்பற்றினர்.
அவ்வண்டிகளை பொலிஸார் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துசென்றனர். வண்டிகளை ஓட்டிச்சென்றவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதான வீதியில் திறந்திருந்த ஒரு வளவுக்குள் குறித்த வண்டிகளை செலுத்தி மணலை கொட்டிவிட்டனர்.
அத்துடன் வண்டிகளிலிருந்து மாடுகளை  அவிழ்த்துவிட்ட  அவ்விருவரும் அங்கிருந்து  தப்பிச்சென்றுள்ளனர் என்றனர். இந்நிலையில் ,அந்த மாட்டு வண்டிகளை ஓட்டி சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு  பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மணல்களை ஏற்றிக்கொண்டுவந்த வண்டிகளை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் எடுத்துச்செல்ல முற்பட்ட சமயமே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை எற்பட்டது.
இதனால் அந்த வீதியில் சில மணிநேரத்திற்கு வாகன நெரிசலும் ஏற்பட்டதையடுத்து. இதனையடுத்து மண்வண்டிகளில் இருந்த உடைமைகள் கைப்பற்றிய பொலிஸார் வண்டிகளை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு வந்துவிட்டனர் என்றனர். 

No comments:

Post a Comment