கிழக்கு மாகாணசபை அமர்வை சபையின் தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டமைக்கு
எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
மாகாணசபைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (21ம் திகதி) செவ்வாய்க்கிழமை காலை சபை அமர்வு தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானபோது எதுவித காரணமும் இன்றி சபை அமர்வு அடுத்தமாதம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எதுவித காரணமும் இன்றி தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்ட அடாவடித்தன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாகாணசபை அமர்வில் மீள்குடியேற்றம், மின்சார கட்டணம் அதிகரிப்பு உட்பட பல தனி நபர் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் திட்டமிட்டவகையில் சபை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தவிசாளர் ஆளும் தரப்பு கூட்டத்தை கூட்டி அவர்களுக்கிடையே கலந்தாலோசித்து தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதனை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இதை எதிர்ப்பு தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment