காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான வீதியிலுள்ள
பெரிய பாலம் மற்றும் சிறிய பாலம் இரண்டையும்
உயர்த்தி இப் பாலங்களுக்கூடாக இரு வாகனங்கள் சிரமமின்றி பயணிக்கக்
கூடியவாறு அகலமாக்குவதற்கு அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப் பாலங்கள் இரண்டும் மிகவும்
குறுகியதாகவும் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் பயணிக்க முடியாமலும் உள்ளன.
இதுமாத்திரமல்லாமல் மழை பெய்யும் காலங்களில் சிறிய பாலம் வெள்ள நீரில் அப்படியே
மூழ்கி பாதையில் வாகனப் போக்கு வரத்துச் செய்ய முடியாத நிலையும் அடிக்கடி
ஏற்படுகின்றது. இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல சிரமங்களை
அனுபவிப்பதுடன் உயிர் ஆபத்துக்களையும் எதிர் நோக்குகின்றனர் இச் சிறிய பாலத்தை
உயர்த்துவதுடன் மாவடிப்பள்ளி எல்லையிலிருந்து
காரைதீவு சந்தி வரையும் வீதியும் அகலப்படுத்தப்பட்டு உயர்த்தப்படல்
வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்படுகின்றது.
கல்முனையிலிருந்து அம்பாறைக்கும்
அம்பாறையிலிருந்து கல்முனை, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும்
நாளாந்தம் பல நூற்றுக் கணக்கான வாகனங்கள் இப்பாலங்களினூடாகவே பயணிக்க
வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment