அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி
ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால்
காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment