அண்மையில்
அலரிமாளிகையில் கிழக்கு மாகாண சபை தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலில்
நடந்த நிகழ்வாக தன்னைப்பற்றி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எந்தவித
உண்மையும் இல்லை என்றும், அவ்வாறு ஆதாரபூர்வமற்றவகையில் ஊடகங்கள்
செயற்பட்டு வருவது தொடர்பில் தனது கவலையையும், மனவேதனையையும் தெரிவித்துக்
கொள்வதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன் அமைச்சர்
எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
அண்மையில்
பத்ரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் இன்று (23)வெளியிடப்பட்டுள்ள ஊடக
அறிக்கையியே கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால்
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகங்களும்,
ஊடகவியலாளர்களும் உண்மையின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். இதனை எமது
தமிழ் பேசும் மக்களுக்கான ஊடகங்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒரு சில
ஊடகங்கள் மட்டுமே மிகவும் பொறுப்புடனும், மக்களின் எதிர்பார்ப்புக்களுடனும்
செயற்பட்டு வருகின்றது. ஏனைய அனேகமான ஊடகங்கள் சிறு சம்பவங்களை
பூதாகரமாக்கியும், ஊகத்தின் மூலமும், ஆதாரமற்ற ஒரு பக்க தகவல்களின்
அடிப்படையிலும் செயற்பட்டுவருகின்றன. இவ்வாறான விடங்கள் தர்மமாக அமையாது.
அவ்வாறான நடவடிக்கைகளைக் கொண்ட நிறுவனங்களின் நிலைபேறான தன்மையும்
கேள்விக்குறியாகவே காணப்படுகின்றமை வரலாறாகும்.
அரசியல்
மற்றும் ஊடகத்துறைகிளைடையே நிலவும் தொடரான போராட்டங்கள் அரசியலதும்
ஊடகத்தினதும் நிலையான இலட்சனங்களாகும். இந்த யதார்த்தங்களிலிருந்து
விடுபடுவது மிகவும் கடினமானது என அல்-ஜெஸீரா தொலைக்காட்சியின் முன்னாள்
பணிப்பாளர் வஹட் கன்பர் ஓரிடத்தில் குறிப்பிட்டுக்கூறியதை இங்கு நினைவு
படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். மேலும் ஒருசம்பவத்தை அறிக்கையிடும்போது
அதனுடன் தொடர்புபட்ட நல்ல பிரிவினர் யார்?, தீய பிரிவினர் யாh? என்பதனைப்
பார்ப்பது மட்டுமல்ல அவர்கள் வாழும் சமூகம், பிரச்சினையின் ஆரம்பம்
தொடர்பாகவும் அறிந்து மிக புத்திசாதுர்யமாக செயற்பட வெண்டும். அது தொடர்பான
நல்ல அறிவும் விளக்கமு; இருக்க வேண்டும். என்றும் அழகான முறையில் அவரால்
தெரிவித்து இருப்பது எமக்கு மகிவும் பொருத்தமாகவே உள்ளது.
கிழக்கு மாகாண
சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் அண்மைக்கால செயற்பாடு தொடர்பில்
விளக்கமளிப்பது இங்கு பொருத்தமாக அமையும் நினைக்கின்றேன். அந்தவகையில்
கிழக்கு மாகாணசபையின் மாதாந்தக்கூட்டம் சென்ற மே மாதம் 21 ஆம் திகதி
நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சியைச்சேர்ந்த சில
உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் கூட்டம் ஆரம்பமானதும் தாங்கள் சபையை
விட்டு வெளிநடப்பு செய்யவுள்ளதாக கூறினார்கள். இவ்விடயத்தை நானும், கிழக்கு
மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களும் இணைந்து முதலமைச்சர்
நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். தேனீர்
இடைவேளைக்காக சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டவேளையில் முதலமைச்சரினால்
ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று அவசரமாக கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கிழக்கு மாகாண
சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காத வரை
கிழக்கு மாகாண சபையின் கூட்டங்களை பகிஸ்கரிப்பதாகவும் தெரிவித்தனர். தேநீர்
இடைவேளையின் பின்னர் கூடிய சபை நடவடிக்கைகள் தவிசாளரினால்
ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் ஜூன்18 ஆம் திகதி பேரவைக் கூட்டம் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்
கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நான்கு பேரும் கலந்துகொண்ட விஷேட
கூட்டமொன்று சென்ற மே 26ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆளுங்கட்சி
உறுப்பினர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு
காணாதவரை அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் சமூகமளிப்பதில்லை எனவும்
தீர்மாணிக்கப்பட்டது. சென்ற 15.06.2013ம் திகதி கிழக்கு மாகாண சபையின்
ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றினை பாசிக்குடா ஹோட்டல் ஒன்றில்
நடாத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர்,
அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களை சென்ற 15.06.2013 ஆம் திகதி பி.ப.
04.30 மணிக்கு விசேட கூட்டம் ஒன்றிற்காக அலரிமாளிகைக்கு வருமாறு அழைப்பு
விடுக்கப்பட்டது. இந்நிலையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் என்ன
விடயங்கள் பற்றி பேச வேண்டும் என்பது தொடர்பாக விசேட கூட்டம் ஒன்று
அன்றையதினம் பி.ப. 01.30 மணிக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களால்
கூட்டப்பட்டது.
இக்கூட்டத்திற்கு
தேசியகாங்கிரஸ் கட்சியின் சார்பில் நானும், உறுப்பினர்களான எம்.எல்.
அமீர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில்
கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, உறுப்பினர்களான டி. வீரசிங்க,
பியன்தபத்திரன ஆகியோரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்
பிரதித்தவிசாளர் எம்.எஸ் சுபையிர், உறுப்பினர்களான எம்.எஸ் அமீர் அலி,
ஏ.எப் சிப்லி ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில்
முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் விவசாய கால்நடைகள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர்
அவர்களும் சமூகமளித்திருந்தனர். அப்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
ஏனைய உறுப்பினர்களின் வருகை பற்றி; கேட்ட போது அவர்கள் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களிடம் பேசிக்கொண்டு
இருக்கின்றார்கள் என்றும் சற்று தாமதமாக வருவார்கள் என்று கூறப்பட்டடது.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்
எம்.ஐ.எம் மன்சூர் அவர்களும் உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஏ.எல். நஸீர்,
ஏ.எம் ஜெமீல், அன்வர் ரம்ழான் ஆகியோர்களும் இக்கூட்டத்திற்கு வருகை
தந்தனர்.
இக்கூட்டத்தில்
பல விடயங்கள் தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்று பல கருத்தக்கள்
பரிமாறப்பட்டன. சில கருத்துக்களில் உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமைப்பாடு
ஏற்படவில்லை. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு
பேசவேண்டிய முக்கியமான விடயங்களை ஒரு முடிவாக எடுக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மாணங்களை எல்லாக்கட்சி
உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும். எனது அமைச்சைப்
பொறுத்தவரையில் அமைச்சு நடவடிக்கைகளில் எவ்விதமான தடைகளும், தலையீடுகளும்
ஏற்படவில்லை. ஆனாலும் ஆளுங்கட்சி அமைச்சர் என்ற வகையில்
கூட்டுப்பொறுப்புடன் செயற்பட்டு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கையில்
எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு இது வரை உங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி
வருகின்றேன் எனக்கூறினேன்.இறுதியாக அலரிமாளிகையில் நடைபெறவிருக்கின்ற
கூட்டத்தில் பேசவேண்டிய விடயங்கள் பற்றி தீர்மானித்து முடிவு எடுத்து
விட்டு கூட்டம் முடிந்து வெளியே வருகின்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் குழுத்தலைவர் எம்.ஐ.எம்
ஜெமில் அவர்கள் என்னிடம் வந்து நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மாணங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்
உடன்பாட்டிற்கு வர மாட்டோம் எனக்கூறினார். கூட்டத்தில் வைத்து
ஏற்றுக்கொண்டு விட்டு வெளியே வந்து உடன்படுவது இல்லை என்று கூறியதை கேட்டு
கவலை அடைந்தேன்.
இதனைத்தொடர்ந்து
அலரிமாளிகைக்குச் செல்லும் வழியில் கொள்ளுப்பிடியில் உள்ள பள்ளிவாசல்
ஒன்றிற்கு அஸர் தொழுகைக்காக சென்ற போது அங்கு அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர்,
எம்.ஐ.எம் மன்சூர் ஆகியோரைக்கண்டேன். அப்போது அவர்கள் உங்களுடன்
பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் மூன்று பேரும்
பள்ளிவாசலில் அமர்ந்து பேசிக்கொண்டோம். நாங்கள் நடைபெற்ற கூட்டத்தில்
எடுத்த தீர்மானத்திற்கு உடன்படவில்லை எனவும் உடன்படாமைக்கான காரணத்தையும்
என்னிடம் கூறினார்கள். அமைச்சர்கள் இருவரிடமும் பேசி விட்டு உடனடியாக அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான
அமீர் அலியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முஸ்லிம் காங்கிரஸின்
அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம் மன்சூர் மற்றும் மாகாண சபை
உறுப்பினர்களின் நிலைப்பாடு பற்றித் தெரியப்படுத்தினேன்.
இதன் பின்னர்
மாலை 04.30 மணியளவில் அலரிமாளிகையில் இடம் பெற்ற கூட்டத்தில் அமைச்சர்களான
மைத்திரிபால சிரிசேன, சுசில் பிரேம் ஜயந்த, ஏ.எல்.எம். அதாஉல்லா, றிசாட்
பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். நண்பகல் இடம் பெற்ற ஆளுங்கட்சி
உறுப்பினர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி முன்னாள்
முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தற்போதைய கிழக்கு மாகாண
சபையின் நிலைமை தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னர் ஏற்கனவே தீர்மானித்ததன் படி இரண்டாவதாக நான் எனது கருத்தை
தெரிவித்தேன். கிழக்கு மாகாண சபையானது 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக தேர்தல்
நடாத்தப்பட்டு புதிதாக மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. கிழக்கு மாகாணத்தில்
முதலாவது முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டு கடந்த
நான்கு வருட காலமாக கிழக்கு மாகாண சபை ஊடாக இன உறவுகள்
வளர்த்தெடுக்கப்பட்டு மூவின மக்களுக்கும் மூன்று மாவட்டங்களிலும் பாரிய
அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபை மீது மக்களின் நம்பகத்
தண்மையினை ஏற்படுத்தினோம். புதிய முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் அவர்கள்
நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் சில காலம் சபை நடவடிக்கைகளை நடாத்தி
வந்தோம்.
அண்மையில்
கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக சென்ற 21.05.2013 திகதி
முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின்
கூட்டத்தில் நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டதன் பின் அமைச்சர்களும்
உறுப்பினர்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத வரை கிழக்கு மாகாண சபை
கூட்டங்களில் கலந்து கொள்வதில்லையென தீர்மானித்தனர். இதன் பின்னர்
அமைச்சர்கள் நான்கு பேரும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத வரை
அமைச்சரவை கூட்டங்களுக்கும் சமூகமளிப்பதில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்பதால் இதுவரையில் பத்திரிகைகளுக்கு இது
தொடர்பான எவ்விதமான கருத்துக்களையும் இன்று வரை நாங்கள் தெரிவிக்காமல்
இருக்கின்றோம். இன்று இக்கூட்டத்தில் பிரச்சினைகளை ஒழிவு மறைவின்றி வெளியே
சொல்லி கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் சிறப்பாக இடம் பெற ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துகொண்டிருந்த போது திடீரென குறுக்கிட்ட
கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்கள் ஏன் உங்களுக்கு பிரச்சினை
இல்லையா? எனக்கேட்டார். எனக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை என நண்பகல்
நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலும் கூறினேன் இப்போதும் கூறுகின்றேன்
எனக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை ஆனால் கிழக்கு மாகாண சபை
நடவடிக்கையில்தான் பிரச்சினைகள் உள்ளது எனக்குறிப்பிட்டேன்.
இதனைத்தொடர்ந்து
அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு
இறுதியில் கிழக்கு மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக
அமைச்சர்கள், உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதியின்
கவனத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிப்பதாகவும் பத்து தினங்களுக்குள் கிழக்கு
மாகாண சபையின் முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபையில்
அங்கம் வகிக்கும்; அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம்
ஒன்றினை ஜனாதிபதியுடன் நடாத்துவதாகவும் 18.06.2013 ஆம் திகதி நடைபெறவுள்ள
மாகாணசபை அமர்விற்கு ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்
சமூகமளிக்குமாறும் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, சுசில் பிரேம் ஜயந்த
அவர்களும் இணைந்து தெரிவித்தனர். இதன்போது 18.06.2013ம் திகதி நடைபெறவுள்ள
கிழக்கு மாகாண சiபின் கூட்டத்தினை ஜனாதிபதி அவர்களை சந்தித்ததன் பின்னர்
நடாத்துவதற்கு ஒத்தி வைக்குமாறு சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மைத்திரிபால சிரிசேன, சுசில் பிரேம் ஜயந்த ஆகிய இரு அமைச்சர்களும் மாகாண
சபையின் கூட்டத்தினை ஒத்தி வைக்காமால் ஏற்கனவே தீர்மானித்ததன் படி சபைக்
கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் சமுகமளிக்குமாறும் விரைவில்
ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தருவதாகவும்
தெரிவித்தனர்.
இத்தீர்மானத்தினை
அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுகொண்ட நிலையில் கூட்டம்
நிறைவுபெற்றது. இந்நிலையில் சென்ற 18.06.2013ம் திகதி கிழக்கு மாகாண
சபைக்கூட்டம் திருகோணமலையில் நடைபெறவிருந்த போது காலையில் ஆளுங்கட்சி
அமைச்சர்கள், உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்றிற்கான அழைப்பு
விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நானும் அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர்
அவர்களும் உறுப்பினர்களான எம். எல் அமீர், ஆரிப் சம்சுதீன், அன்வர்
ரம்ழான், ஏ.எல் தவம், ஏ.எல். நஸீர், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டோம். இக்கூட்டத்தில் நமது
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத வரை மாகாணசபை கூட்டத்திற்கு
சமூகமளிப்பதில்லையென கூறப்பட்டது. இவ்வேளையில் நானும் முன்னாள் முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து
கொள்வது இல்லையென்றால் 15.06.2013 ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற
கூட்டத்தில் நாங்கள் 18.06.2013 ஆம் திகதியில் நடைபெறவுள்ள மாகாண சபை
அமர்விற்கு செல்ல மாட்டோம் என திடமாக கூறி முடிவு எடுத்திருக்கவேண்டும்
வேண்டும். மாறாக அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் மாகாண
சபை அமர்வில் கலந்து கொள்வது என தீர்மானித்து விட்டு இப்போது நாங்கள்
கூட்டத்துக்கு சமூகம் கொடுப்பது இல்லை என்று கூறுவது நயவஞ்சகத்தனமான
செயலாகும் என கூறினோம்.
எது எப்படி
இருந்தாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் அரைவாசிப்பேர் சபை
நடவடிக்கைகளில் கலந்து கொள்வதும் மறு அரைவாசிப்பேர் கலந்து கொள்ளாமல்
இருக்கின்ற நிலை தோன்றுமானால் கிழக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
நிரந்தரமாக இரண்டாக பிரிந்து விடக்கூடிய அபாயத்தை உணர்ந்தவர்களாக
ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டு நாங்களும்
அன்றைய தினம் மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலான கடந்த நான்கு வருட
ஆட்சியின் போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர், அமைச்சர்களாக நாங்கள்
இருந்து கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாக பிரச்சினை
ஏற்பட்டபோதும் கிழக்கு மாகாண சபைக்கு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சித்
திருத்தச் சட்டமூலம், நாடு நகர திருத்த சட்டமூலங்களை மாகாண சபையில் அங்கம்
வகித்த எல்லா அரசியல் கட்சியுடனும் இணைந்து அரசாங்க உயர் மட்டத்தோடு
பேச்சுவார்த்தைகளை நடாத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம். ஆனால்
தற்போதைய கிழக்கு மாகாண சபை ஆட்சியில் அங்கம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின்
மாகாண சபை உறுப்பினர்களால் ஒரே நிலையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும்
அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை
நாங்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலைப்பாடு உள்ளது. இவ்வளவு காலமும் ஆளுங்கட்சி
உறுப்பினர்களுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்துள்ள நிலையில்
அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் நான் தெரிவித்த கருத்து தொடர்பாக
வெளிவந்துள்ள உண்மைக்கு புறம்பான செய்தியினை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன்.
No comments:
Post a Comment