இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரணடாம், மூன்றாம் வருட மாணவர்களின்
கல்வி நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளன.
இம்மாதம் 10 ஆம் திகதி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி
நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்கனவே உத்தேசித்திருந்ததாக பல்கலைக்கழகத்தின்
பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கூறியுள்ளார்.
எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் மூன்றாம் வருட மாணவர்களின்
கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 24 ஆம் திகதியும் இரண்டாம் வருட மாணவர்களின்
கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாம் முதலாம் திகதியும் ஆரம்பிக்கத்
தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்படும் தினத்திற்கு முன்தினம் பிற்பகல் 5 மணிக்கு முன்னர்
விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment