Monday, July 1

முஸ்லிம் பாடசாலையில் திடீரென முளைத்த புத்தர் சிலை (படங்கள் இணைப்பு)



ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்தரைச்சேனை அஸ்ஹர் வித்தியால விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (30.06.2013) திடீர் என புத்தர் சிலை முளைத்துள்ளதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. 
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானம் இம் மைதானமாகும் இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
கடந்த 01.03.2010ம் திகதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்றும் கூறியதற்கிணங்க பாடசாலை நிறுவாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இது தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவனைகள் இடம் பெற்றதன் பின்னர் நீதி மன்றத்தால் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும் பாடசாலை மைதானம் என்று சுற்றிக் காட்டி 25.06.2013ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று அதிகாலை (01.07.2013) மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில்  மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment