சாய்ந்தமருது கொம்டெக் கல்வியகத்தில் 2010 ல் வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நெறியினை பூர்த்தி செய்த பட்டதாரி மாணவர்களுக்கும் மற்றும் 2010 ல் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றி
கல்வியகத்தில் கற்கை நெறியினை தொடர்ந்த 400 மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா இன்று கொம்டெக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொம்டெக் கல்வியகத்தின் சிரேஸ்ட பதிவாளர் எம். எம். ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.அஸ்றப் இ கணக்கியலும் நிதியும் துறைசார் தலைவர் கலாநிதி ஏ.ஜௌபர் இ மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.சிராஜ்இ இறக்காம பிரதேச சபைத் தவிசாளர் ஏ. நைசர் மற்றும் விரிவுரையாளர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
2010 ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் கொம்டெக் கல்வியக்திலிருந்து 33 பேர் கலைப்பிரிவிலும் ஒருவர் வர்த்தக முகாமைத்துவத்திலும் பட்ட்ப்படிப்பினை புர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment