சாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது மேற்கு கரைவாகு வட்டையில் நெற் பயிர் செய்கை பண்ண முடியாது கைவிடப்பட்ட நிலத்தை
அந்த நிலத்திறகு உரித்துடைய மக்கள் மண் போட்டு நிரப்பி அவ்விடத்தை மேட்டு நிலமாக மாற்றி மேட்டு நிலப்பயிர் செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்த முயற்சியினை விவசாய திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதனை தொடர்ந்து அக்காணிக்குச் சொந்தக்காரர்களான பெரும் திறளான மக்கள் அவ்வதிகாரிகளுக்கு எதிராக நேற்று வொலிவேரியன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்..
மஹிந்தச் சிந்தனையின் கீழ் மேட்டு நிலப்பயிர் செய்கையை மேற்கொள்ள வழி விடு. ஏன் எங்களுக்க மட்டும் இந்தப் பராபட்சம். போன்ற கோசங்களை கொண்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்திருந்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் திடீரென அந்த இடத்திற்கு விஜயம் செய்து ஜனாதிபதியுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இது சம்பந்தமாக கதைத்து ஒரு முடிவினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் ஆண்களும் பெண்களும் பெரும் தொகையில் கலந்து கொண்டது முக்கிய அம்ஸமாகும்.
No comments:
Post a Comment