Monday, October 31
Tuesday, October 25
"அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்" நூல் வெளியீட்டு விழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில்
கிழக்கில் மீண்டும் பொலிஸில் பதிய உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விவரங்கள் பொலிசாரால் திரட்டப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வீடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்போர் மற்றும் தற்காலிகமாக தங்கிருப்போர் விவரங்கள் கேட்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76வது பிரிவின் கீழ் பொலிசாருக்குள்ள அதிகாரத்தின் கீழ் இந்தத் தகவல்கள் கேட்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்த தகவல்கள் குறித்து காவல்துறை அல்லது பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியவில்லை.
ஆனால் மட்டக்களப்பு நகரில் மனித உரிமை வழக்கறிஞர் பே. பிரேம்நாத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76வது பிரிவின் கீழ் பொலிசாருக்குள்ள அதிகாரத்தின் கீழ் இந்தத் தகவல்கள் கேட்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்த தகவல்கள் குறித்து காவல்துறை அல்லது பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியவில்லை.
ஆனால் மட்டக்களப்பு நகரில் மனித உரிமை வழக்கறிஞர் பே. பிரேம்நாத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
Sunday, October 23
Saturday, October 22
ஹரீஸ் எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
சனிக்கிழமை, 22 ஒக்டோபர் 2011 19:34
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அக்கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பிலான கடிதமொன்றை சட்டத்தரணி பாயிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு ஒக்டோபர் 20ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பிலான கடிதமொன்றை சட்டத்தரணி பாயிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு ஒக்டோபர் 20ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
மறைந்த ஊடகவியலாளர்களான அமரர் கே.என்.தர்மலிங்கம் மற்றும் மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோருக்கான கல்முனையில் இரங்கற் கூட்டம்
கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்காக நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
Saturday, October 22, 2011
மட்டக்களப்பில் அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளைய தினம் இந்தப் போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் தவிர்க்க முடியதாத காரணங்களினால் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை இந்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
இந்த பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Friday, October 21
இதயத்தில் வீற்றிருக்கும் முஸ்லிம் தேச தலை நகர மக்களுக்கு நன்றிகள் - பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஊர்வலம்
Thursday, October 20
சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்கு சான்றிதல்கள்
சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையிலிருந்து இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத தோற்றி சித்தியடைந்த 5 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 85 மாணவர்களும் அக்கரைப்பற்று உதவும் கரங்கள் அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இது தொடர்பான வைபவம் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நட்பு விழா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவர்களின் நட்பினை மேம்படுத்துவதற்காக இரண்டாம் வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று பல்கலைக்கழக ரிவர் பாங்க் பார்க்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார். இதில் பீடாதிபதிகளும் திணைக்களத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார். இதில் பீடாதிபதிகளும் திணைக்களத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Wednesday, October 19
கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை
Wednesday, October 19, 2011
முன்பள்ளி பாடசாலை பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களிடையே ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சிறுவர் சந்தை ஒழுங்கமைப்பு நிகழ்வின் கீழ் கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கழமை சிறுவர் சந்தை நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கடந்த எட்டாந்திகதி நடை பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து வரவேற்கப்பட்டு அழைத்து வரப் பட்டார்.
மும் மத தலைவர்களின் ஆசியுடன் இடம் பெற்ற இவ்வைபவத்தில் மாநகர சபைக்கு தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநகர சபை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட முதல்வர் மாநகர சபை உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் சந்தித்த போது அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்றதன் பின்னர் அங்கு நடை பெற்ற கலந்துரையாடலில் கடந்த தேர்தலின் போது நடந்த சம்பவங்களை மறந்து அனைவரும் மக்களுக்கு சேவை என்ற என்னத்தை கொண்டு செயற்ட் பட வேண்டும் என முதல்வர் சிராஸ் அங்கு தெரிவித்தார்.
2010ம்,2011ம் ஆண்டு கலை சலாச்சார, வர்தக முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடங்களுக்கான புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
Wednesday, October 19, 2011
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார, வர்தக முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி ஆகிய பீடங்களில் பதிவு செய்துள்ள புதிய முதலாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31.10.2011 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார். அறிவித்துள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 30.10.2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன்னதாக தத்தம் விடுதிகளில் தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்சியடைந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவிகளுக்கு பியசேன எம்.பி. பாராட்டு
Wednesday, October 19, 2011
அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைதீவு கோட்டத்தைச் சேர்ந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி வைப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அண்மையில் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளான ஏ.ஆர்எம்.அப்ராபாணு இ ஏ.எல்.எப்.பஸ்ரின் ஆகியோரையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டியதுடன் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.
Monday, October 17
கல்முனை மாநகர புதிய முதல்வர் கலாநிதி சிராஸுக்கு சாய்ந்தமருதில் வரவேற்பு
Monday, 17 October 2011 06:40 |
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவாகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு இன்று சாய்ந்தமருது நகரில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
மாளிகைக்காடு சந்தியிலிருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)