Tuesday, November 1

நவம்பர் 31 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில்பிறந்த (2011.10.31) குழந்தை ஒன்றிற்கு பரிசுப் பொதிகள்





இன்று நவம்பர் 31 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவில் பிறந்த (2011.10.31) குழந்தை ஒன்றிற்கு கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இன்று திங்கள் இரவு பரிசுப் பொதிகளை வழங்கி வைத்தார்.


சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஐ.எம்.இப்றாஹிம்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினாகளும் கலந்து கொண்டனர்.

உலக மக்கள் தொகை இன்றோடு 700 கோடியை தொட்டு விட்டது. நேற்று நள்ளிரவுடன் இந்த விஷேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சனத்தொகை நிதியத்தினால் ஏழு பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment