Thursday, November 3

கல்முனை மாநகர முதல்வர் தமிழ் கிராமங்களுக்கு விஜயம்


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று புதன்கிழமை பாண்டிருப்பு, பெரியநீலாவணை, கல்முனை, மணல்சேனை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ் கிராமங்களிற்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அப்பிரசேங்களில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் பார்வையிட்டார்.
குறிப்பாக பாண்டிருப்பில் எல்லை வீதி, கடற்கரை வீதி, பொது நூலக வீதி, சேனைக்குடியிருப்பு முருகன் கோயில் வீதி, வனவாச குறுக்கு வீதி, கலமுனை உடையார் வீதி, நற்பிட்டிமுனை பிள்ளையார் கோயில்முன் வீதி, மணல்சேனை வில்லியம் வீதி, பெரியநீலாவணை சரஸ்வதி மகா வித்தியாலய வீதி என்பவற்றை பார்வையிட்டதுடன் அவ்வீதிகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்திலுள்ள மக்களின் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளையும் முதல்வர் கேட்டறிந்து கொண்டார். இவ்விஜயத்தின்போது கல்முனை மாநகர சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், வீ.கமலதாஸன், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயக்குமார், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, முதல்வரின் பிரத்தியேகச் செயலாளர் ஏ.எல்.எம்.இன்ஸாட், ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் ஆகியோரும் முதல்வருடன் சென்றிருந்தனர்.

Slide3
Slide4
2/3
start stop bwd fwd

Share this post

No comments:

Post a Comment