Friday, November 11

ஒலுவில் துறைமுகத்தால் கிராமங்கள் அழிவடையும் ஆபத்து! எம்.பி பைசால் காசீம்

 
ஒலுவில் பிரதேசத்தால் அமைக்கப்படும் துறைமுகத்தால் ஒலுவில் கிராமம் அழிவடையும் ஆபத்து என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் கிராமத்துக்கு அண்டிய பிரதெசங்களான நிந்தவூர் மற்றும் அட்டப்பளம் போன்ற பிரதேசங்களும் பாதிக்கப்பட்டு வருவதுடன் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களிலும் கடல்நீர் புகுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் திணைக்களத்தினால் ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப்படாமையினாலேயே இந்நிலைமைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கடலரிப்பின் காரணமாக மக்கள் தமது வாழ்வாதாரா தொழில்களை இழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும்ட அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கடலரிப்பினைத்தடுப்பதற்கு கற்பாறைகள் அமைக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாகவம் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment