Friday, November 11

சாய்ந்தமருதில் சட்டசேவையும், விளிப்புணர்வுச் செயலமர்வும்

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் சட்ட சட்டசேவையும் விளிப்புணர்வுச் செயலமர்வும் எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 தொடக்கம் 12.00மணி வரைக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெறவுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் சட்டத்தரணி எம்.ரீ.சபீர் அஹமட் தெரிவித்துள்ளார்.



இச் செயலமர்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எல்.லியாகத்அலி, ஆரிப் சம்சுதீன், எம்.ஸாரிக் காரியப்பர், எம்.ஐ.அஸீஸ், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.



இந்நிகழ்வுக்கு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் அன்றைய தினம் கலந்து கொண்டு இலவச சட்டசேவையினை பெற்றுக் கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

No comments:

Post a Comment