Friday, November 11

கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா

Friday, November 11, 2011

 

கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா இன்று மாலை 4 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க்கில் இடம்பெறவுள்ளது.
 

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் சட்டத்தரணி எம்.சீ.ஏ.அசீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் பிரதம அதிதியாக பங்கேற்க உள்ளதோடு கௌரவ அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசன் அலி, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களும், உயரதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

No comments:

Post a Comment