(நமது நிருபர்)
பொதுமக்களின் நலன் கருதியும், கல்முனை மாநகரசபையின் வருமானத்தினையும் கருத்திற் கொண்டு தற்போதைய பஸ்தரிப்பு நிலைய கடைகளுக்கும் நற்பிட்டிமுனை சந்தைக் கடையறைகளுக்கும் திறந்த கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஆகக் கூடிய கேள்வி உள்ளவர்களுக்கு வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கல்முனை மாநகர சபையின் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் கல்முனை வர்த்தக சங்கத்தினருடனான சந்திப்பில் தெரிவித்தார்.

அண்மையில் (01.11.2011) கல்முனை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளிற்கும் மாநகரசபை மேயருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் ஜே. லியாக்கத் அலி, மேயரின் ஆலோசகர் ஏ. பீர்முகம்மது, ஆசியா மண்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத், வர்த்தக சம்மேளனத் தலைவர் ஏ.ஏ. கரீம், தவிசாளர் யூ.எல்.எம். பசீர், மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும், மாநகரசபை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வர்த்தக சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர் சிறாஸ் மீராசாஹிப் மேலும் கூறியதாவது:
தென்கிழக்கின் முக வெற்றிலை என மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பினால் மிகவும் நேசிக்கப்பட்ட இம்மாநகரத்தின் தேவைகள் குறித்தும், அவைகள் உடன் நிவர்த்திக்கப்படுவதற்கு, வர்த்தக சமூகம் தனது பூரண ஆதரவினைத் தருவதற்கு முன்வைத்தமையினையிட்டு, மாநகர சபை சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநகரம் தொடர்பில் வர்த்தக சமூகத்தின் அக்கறையும், ஆர்வமும் எனக்குப் புதிய உந்து சக்தியை அளிக்கின்றது. இந்நிலைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வேண்டுகின்றேன்.
பிஸ்கால் வளவு தொடர்பில் பிரதேச செயலாளரிடம் பூரண ஆவணங்கள் தொடர்பில் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் இம்மாநகரத்தி;ல் வாகனத் தரிப்பிட வசதி ஏற்படுத்துவது தொடர்பில் ஒரு குழு ஒன்றினை அமைத்து அவர்களது ஆலோசனைப்படி அதனை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்.
தனியார் பஸ்தரிப்பு நிலையம், விலங்கறுமனை என்பன தொடர்பில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தீர்வினை வழங்கவுள்ளேன். இனிவரும் காலங்களில் வெளிநாட்டு நிதியினைப் பெற்று பிரதேச முக்கியஸ்தர்களினதும், சபை உறுப்பினர்களின் ஆதரவுடனும் நிறைவான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் செய்வதற்கு எண்ணியுள்ளேன். இதற்கு வர்த்தக சமூகம் ஆதரவினை நல்க வேண்டும். என மேயர் கேட்டுக் கொண்டார்.

No comments:
Post a Comment