சாய்ந்தமருது 14ஆம் பிரிவு கிராம சேவகரான எம்.என்.எம்.சஜாவை கடந்த சனிக்கிழமை ஒரு குழுவினர் தாக்கியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடமை நிமித்தம் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் தன்னை தாக்கியதாகவும் குறித்த முறைப்பாட்டில் கிராம சேவகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் குழுவிலிருந்த ஏ.ஜே.எம்.ஜவாத்தை குறித்த கிராம சேவகரான சஜா தாக்கியதாகவும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை முதல் சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட நிலையில், இன்று திஙகட்கிழமை வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கிராம சேவகர் சஜா மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிராம சேவகர் சஜா தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ,எல்.எம்.சலீம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment