Monday, February 20

நாடு, நகர சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசிடம் ஆட்சேபம் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் நாளை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நாடு மற்றும் நகர திருத்த சட்டமூலம்; முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு

SLMC logo 1_CI
நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் எக்ஸ்றே பிரிவு!

Doctor examining chest X-ray filmsசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட எக்ஸ்றே பிரிவை திறந்து வைக்கும் வைபவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.




Saturday, February 18

எஸ்.ஜனூஸ் எழுதிய தாக்கத்தி கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா




எஸ்.ஜனூஸ் எழுதிய தாக்கத்தி கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா ஞானக்கவி எஸ்.நிஜாமுதீன் தலைமையில்
இம்மாதம் இருபதாம் திகதி காலை ஒன்பது மணிக்குகல்முனை  மஹ்மூத் மகளிர் கல்லூரி
மண்டபத்தில் இடம்பெறுகிறது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர்
கலாநிதி முஹம்மது சிராஸ் மீராஷாஹிப் கலந்து கொள்வதோடு இன்னும் பல சிறப்பு அதிதிகளும்
வருகை தரவிருக்கிறார்கள். தாக்கத்தி கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து 
முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் அலியார் பீர்முஹம்மது தலைமையில்
சிறப்புக் கவியரங்கமும் இடம்பெறவுள்ளது. இக்கவியரங்கில் ஏ.எம். தாஜ் , எஸ்.ரபீக் ,
கிண்ணியா அமீரலி , ரி.இஸ்மாயில் ,பொத்துவில் அஸ்மின் , மருதமுனை விஜிலி, சுகைதா ஏ. கரீம் ஆகியோர்
கவிதை பாடவிருக்கிறார்கள்.
 20.02.2012 திங்கள்கிழமை..காலை 09மணிக்கு

இடம்.கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி
சேர்.ராஸிக் பரீத் மண்டபம்

பிரதம அதிதி..கலாநிதி,முகம்மத் சிராஸ் மீராசாஹிப்(கல்முனை முதல்வர்)
கௌரவஅதிதி...ஐ..எல்.. முகம்மது சலீம்(பிரதேசசெயலாளர்..சாய்ந்த்தமருது)

தலைமை...ஞானகவிஞர் எஸ்.நிஜாமுதீன் (முன்னால் பிரதிஅமைச்சர்)

வரவேற்புரை (கலைமகள் ஹிதாயா றிஸ்வி அமைப்பாளர் தாடகம் கலை இலக்கிய வட்டம்)
நூலும் நூலாசிரியரும் ..( ஜெஸ்மி .எம். மூஸா)
தாக்கத்தி ...மீதான கூர்திட்டல்( எம்.நவாஸ் செளபி )
சானை பிடித்தல்... (நபீல், கிண்ணியா அமீர் அலி)
ஏற்புரை...நூலாசிரியர் எஸ் . ஜனூஸ்

சிறப்பு கவியரங்கம்
தலைமை...அலியார் பீர் முஹம்மத்(முன்னால் மாவட்ட கல்வி அதிகாரி)
கவியரங்கு பாவலர்கள்
ஏ. எம். தாஜ் (தென்றல் வானொலி)
எஸ்.ரபீக் (பிறைவானொலி)
கிண்ணியா அமீர் அலி
ரீ. இஸ்மாயில்( பொறியலாளர்)
பொத்துவில் அஸ்மின்
மருதமுனை விஜிலி
மூதூர் சுகைதா .ஏ. கரீம்
தாடகம் விருது 2012
கலையுலகில்ஆற்றி வந்த கலை இலக்கிய; சமூக சேவைக்காக தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி சார்பில்''அகஸ்த்தியர்விருதும்.கலைத்தீபகம்\.சமூகத்தீபம்
பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படுபவர்கள்

1. கலாநிதி சபாபதி தில்லை நாதன் (முகாமைத்துவப்பணிப்பாளர் வ,ப,விவசாய பொருளாதாரஅபிவிருத்திக் கம்பனி அம்பாறை)
2. அல்ஹாஜ் சம்சுதீன் தஸ்தகீர் (பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர்,சுகாதாரத் திணைக்களம். கல்முனை.)
3. ஜனாப் சம்சுதீன் சிராஜுதீன் (ஆசிரியர் ஆலோசகர் நட்பிடிமுனை.)
4. ஜனாப் உதுமாலெப்பை அப்துல் லத்தீப் ஜின்னா,j.p., (அரச ஒப்பந்தக்காரர்,தொழிலதிபர்,அக்கரைப்பற்று.)
5. முகம்மது சாதிக் முஹம்மட் நியாஸ்.(அமானா தாகாபுல் லிமிட்டெட்டின் பிராந்திய முகாமையாளர்)
6. அல்ஹாஜ்-ஹனிபா U.L.M. ஹனிபா j.p. (தலைவர் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம்.தேசிய அமைப்பாளர்)
7. ஜனாப் M.T.M.நெளபல் SLAS.,( BBA (Hons),in pub.management (SLIDA) பிரதேச செயலாளர்,கல்முனை.)
8. S.T. றஊப் (சக்தி முகாமையாளர்).

அம்பாறை மாவட்டத்தின் சகலகலை இலக்கிய உள்ளங்களையும்,நட்பு உள்ளங்களையும்
அன்போடுஅழைக்கின்றோம்
தாடகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்

தாக்கத்தி இங்கிருக்கு
தத்தி தத்தியாய்
கவிதை அறுவடை
செய்யலாம் வாங்க.......!