Monday, February 20

சாய்ந்தமருது வைத்தியசாலையில் எக்ஸ்றே பிரிவு!

Doctor examining chest X-ray filmsசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட எக்ஸ்றே பிரிவை திறந்து வைக்கும் வைபவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.





அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம், கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.ரீ.எம்.மர்சூக், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.ஸீ.ஏ. அஸீஸ் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட எக்ஸ்றே பிரிவுக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்து தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment