கிழக்கு மாகாணத்தில் 327 ஆசிரியர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் இன்று கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக தலைமையில் திருகோணமலை விவேகானந்த கல்லுரியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பயின்ற 327ஆசிரியர் நியமனங்களில் 256 தமிழ் மொழி மூலமும் 71 ஆசிரியர்கள் சிங்கள மொழி மூலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 2011ம் ஆண்டு போட்டி பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ் சந்திரகாந்தன் மற்றும் மாகாண அமைச்சர்கள் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர், விமலவீர திசாநாயக ஆகியோர் வழங்கி வைத்தனர்.
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாட துறைகளுக்கு வழங்கப்பட்ட மேற்படி விடயத்தில் திருகோணமலை வலயத்தில் 15 ஆசிரியர்களும் கிண்ணியா வலயத்தில் 35 ஆசிரியர்களும் மூதூர் 48, கல்குடா 58 ஆசிரியர்களும் மட்டக்களப்பு மேற்கு 47, பொத்துவில் திருக்கோவில் வலயங்களுக்கு 16, திருமலை வடக்கு 03,
கந்தளாய் 05, மட்டக்களப்பு மத்தியில் 24 பேரும் நியமிக்கப்பட்டனர்.
சிங்கள மொழி மூல பட்டதாரிகள் அம்பாறை வலயத்திற்கு 09 ஆசிரியர்களும், தெஹியத்த கண்டி 20, மகா ஓயா 13, திருகோணமலை 01, திருகோணமலை வடக்கு 16, மூதூர் 01, கந்தளாய் 11 ஆகிய அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் பதில் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment