‘சிலர் இப்போது மஹிந்த கம்பனி என்று கூறுகின்றார்கள் உண்மைதான் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்களை தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா அமைச்சரின் தீர்க்க தரிசனத்தால் எங்களின் வாக்குகளின் ஊடாக ஜனாதிபதியாக ஆக்கினோம் அதனுடாக தேசிய காங்கிரசும் மகிந்த கம்பெனியில் பங்குதாரர்கள்’
சாய்ந்தமருதில் வீதிகளை அமைத்தல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்மானப்பணிகளை
ஆரம்பித்து வைக்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜெயிக்கா நிறுவனத்தின்
நிதிஉதவியுடனும் கமநேகும திட்டத்தின் ஊடாகவும் நிர்மாணிக்க
திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வும்
பொதுக்கூட்டமும் நேற்று இடம்பெற்றது.
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத்
தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி
நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மானமும் கிராமிய மின்சாரம் மற்றும்
நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிபிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டை எதிர்வரும் 2016ம்
ஆண்டு வரை இங்குள்ள பெரிய சால்வை அல்லது சின்னச்சல்வை அதுவும்
இல்லாவிட்டால் அதைவிட சின்னச்சால்வைகளே ஆளப்போகின்றன எனவே
எங்களைப்பொறுத்தமட்டில் பிரதேச சபைகள் கலைந்தாலும் பரவாயில்லை மாகாண
சபையைக்கலைத்தாலும் ஒன்றுமில்லை பாராளுமன்றத்தைக் கலைத்தாலும்
பயப்படப்போவதுமில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் அக்கரைப்பற்றில் ஜனாதிபதி
தனது உரையின் போது அமைச்சர் அதாவுல்லா தனது சகோதரர்களில் ஒருவர் என்று
குறிப்பிட்டதாகவும் உரையாற்றினார்.
சிலர் வேறு கட்சிகளின் ஊடாக பிரதிநிதித்துவங்களைபெற்றுக்கொண்டு அந்த
கட்சிகளுக்கு துரோகமிழைத்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து பார்வையாளர்களாக
இருப்பதகவும் உண்மையில் தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை
உருவாக்கிய பங்காளி என்பதால் தாங்கள் அதிக அதிகமான அபிவிருத்தி வேலைகளை
செய்ய முடிவதாகவும் அண்மையில் அட்டாளைச்சசேனையில் வெட்கமில்லாமல்
நீதியமைச்சர் கல் நாட்டிச்சென்றதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் உதுமாலெப்பை
முடிந்தால் முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவமும் தாங்கள் ஒதுக்கீடு செய்த
நிதி ஒதுக்கீட்டில் நிதயுதவிகளை பெற்றுவந்தது அபிவிருத்திகளை செய்து காட்ட
வேண்டும் என்று சவால் விடுத்தார்.
முஸ்லீம் காங்கிரசார் எதிர்பார்ப்பதல்லாம் நாட்டில் எப்போதும் யுத்தம்
நடைபெற வேண்டும் பிரச்சினைகள் இருந்தால்தான் தாங்களது வாக்கு வங்கிகளை
நிரப்பிக்கொள்ள இனவாதத்தை பேசிக்கொள்ளலாம் என்று. முஸ்லீம் காங்கிரசார்
சற்று சரிந்து கிடந்ததாகவும் தம்புள்ளை பள்ளி விடயத்தில் நிமிர்ந்து
விட்டதாகவும் கூறித்திரிகின்றனர். அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற
கூட்டமொன்றில் சிரேஷ்ட்ட அமைச்சர் ஒருவர் பேசுகையில் முன்னாள் அமைச்சர்
அமீரலி அதவுள்ளவைப்போன்ற அமைச்சர்கள் இந்த சமூகத்துக்காக வருடத்துக்கு ஒரு
தடவை அமைச்சரவையில் பேசினாலும் போதும் என்று கூறியதாக குறிப்பிட்டார்.
தாங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் பேசியதையே தற்போதும்
பேசிக்கொண்டிருப்பதாகவும் 2005 தேசிய காங்கிரசின் மகாநாட்டில்
ஜனாதிபதியிடம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் கிழக்கை
பிரிக்குமாரும் நாட்டில் நன்மதிப்பை ஏற்படுத்துமாறும் கோரியதாகவும் இதற்கு
ஜனாதிபதி தான் பதிலளிக்கையில்; அம்மாந்தோட்டை நாட்டு ஊரைச்செர்ந்தவன்
நீங்கள் கேட்டவற்றை நிறைவேற்றுவேன் நம்புங்கள் என்று கூறியதாகவும்
காலப்போக்கில் வாக்குறிதிகளை நிறைவேற்றியதாகவும் கூறினார்.
முஸ்லீம் காங்கிரசார் போன்று தாங்கள் கந்தூரி கிடாரங்கள் அல்ல என்று
குறிப்பிட்ட அமைச்சர் தாங்கள் எப்போதும் உங்களுடனே இருப்போம் என்று
கூறினார். முஸ்லீம் காங்கிரசார் தேர்தல்கள் வந்தால் மட்டுமே
கந்துரிக்கிடாரங்கள் போல் உலாவருவதாகவும் கூறினார்.
இதேவேளை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தேவைகள் என்று வரும் போது
சிலர் தங்களைத் தேடி வருவதாகவும் தேர்தல்கள் வந்து விட்டால் முஸ்லீம்
காங்கிரசுக்கு வாக்களித்து விடுவதாகவும் குறைபட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment