கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு
அங்குரார்ப்பணவைபவம் இடம்பெற்றது. இதன்போது அப்பாடசாலையின் சாரணிய
வளர்ச்சிக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று –
கல்முனை உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் நிதியுதவி
வழங்கினார்.
மேற்படி பாடசாலையின் சாரண பொறுப்பாசிரியரும் மாவட்ட சாரண தலைவருமான
எஸ்.எம்.எம்.றம்ஸான் ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து
கொண்ட எஸ்.எல்.முனாஸ் பாடசாலையின் சாரணர் வளர்சிக்கான நிதியின் காசோலையை
பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பரீட் அவர்களிடம் வழங்கியதுடன் திறமைகளை
வெளிக்காட்டிய புதிய சாரணர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கினார்.
இதே வேளையில் பாடசாலையின் நினைவாக பாடசாலையின் வெளியீடுகளை பிதம அதிதிக்கு சாரண பொறுப்பாசிரியர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர்
ஐ.எல்.ஏ.மஜீட், கௌரவ மாவட்ட சாரண ஆணையாளரும் பயிற்சிகளுக்கு பொறுப்பான
எம்.ஐ.எம்.முஸ்தபா, உதவி மாவட்ட சாரண ஆணையாளரும் இரண்டாம் லெப்டினன்
கே.எம்.தமீம் , உடற்கல்வித் துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார்,
சாரணிய மாவட்ட தலைவர் எம்.எப்.றிபாஸ் உட்பட சாரண ஆசிரியர்களான எம்.எச்.எஸ்.
ஆர். மஜீதியா, .எஸ்.எம்.எஸ்.றிஸானா, எஸ்.ஆர் பர்வின் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment