Monday, June 18

கல்முனை வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொம்டெக் நிறுவனத்தில் இலவச பயிற்சி கருத்தரங்கு!


கல்முனை வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொம்டெக் நிறுவனத்தில் இலவச பயிற்சி கருத்தரங்கு!
கல்முனை கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
கொம்டெக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீலின் அனுசரணையுடன் முழுநாள் செயலமர்வாக இடம்பெற்ற இக்கருத்தரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பங்குபற்றினர். அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இக்கருத்தரங்கில் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இப்பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கொம்டெக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், கட்சியின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நசார் ஹாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இந்நிகவில் கலந்து கொண்டனர்.
கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சீ.எம்.ஏ.முனாஸ் நிகழ்சிகளை நெறிப்படுத்தினார்

No comments:

Post a Comment