ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் அமைப்பதற்கான உடன்படிக்கை இன்று புதன்கிழமை பிரதமர் மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும், பள்ளிவாயல் நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர்.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் கேஸியன் ஹேரத், மகாவலி அமைச்சின் தலைவர் நிஹால் ரூபசிங்க அவர்களும் திறைசேறி பணிப்பாளர் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஆரம்பகட்ட வேலைக்காக ரூபா 8 கோடியே 70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்நிதியினை 18 மாதத்திற்குள் செலவுசெய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். கோ நிறவனத்தின் இஸ்லாமிய கட்டிட கலைஞ்சர் இஸ்மாயில் அவர்களின் முழுமையான வடிவமைப்பில் மூன்று மாடிகளைக் கொண்ட பைதுல் முகத்தஸ் கட்டிட அமைப்பில் நிறுவப்படவுள்ள இப்பள்ளிவாயல் ஆசியாவிலேயே எங்குமில்லாத மிகப்பெரிய 65அடி அகலத்தினைக் கொண்ட டோம்மைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.
சுமார் ஐயாயிரம் பேர்களை ஓரே நேரத்தில் தொழுகைக்காக உள்ளடக்கக்கூடிய வகையில் இப்பள்ளிவாயல் அமையப்பெருவதோடு இஸ்லாமிய தஹ்வாபணி மற்றும் ஹிப்ழு குர்ஆன் மதரஸா, இஸ்லாமிய நூலகம் என்பனவும் அமையப்பெறவுள்ளது.
இதற்காக வெளிநாட்டு உதவிகளும் பெறபடவுள்ளதாகவும் இதனை புரணப்படுத்துவதற்கு 200மில்லியன் எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment