Wednesday, June 20

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் அலிஸாஹிர் மௌலானா - மஹிந்தானந்த அளுத்கமகே





இன்னும் ஒரு சில மாதங்களில் அலிஸாஹிர் மௌலானா அவர்கள்தான் கிழக்கின் முதலமைச்சராக வருவார். கிழக்கின் அடுத்த முதலமைச்சராகப் போகும் அலிஸாஹிர் மௌலானாவுக்கு ஆதரவளிக்கத்தான் ஜனாதிபதி எங்களை மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தார்இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் ஒரு வருடப்பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை பகல் ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகரிலிருந்து புன்னைக்குடா கடற்கரை வரை உள்ள வீதி ஏழு கோடி ஐம்பது லட்ச ரூபாய் செலவில் நவீன கார்பெற் வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான பெயர்ப்பலகையை  அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏறாவூர் நகர சபையின் தலைவருமான அலிஸாஹிர் மௌலானா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர சபையின் தலைவருமான அலிஸாஹிர் மௌலானாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

 ’
நாம் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விரிவாக்கம் செய்ய மட்டக்களப்புக்கு வந்த கையோடு ஜனாதிபதியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவரான அலிஸாஹிர் மௌலானா அவர்களுக்கு நேசக்கரம் நீட்டவே இங்கு வந்தோம்.

அவருக்கிருக்கும் செல்வாக்குகளையும் அரசியல் அனுபவத்தையும்  பயன்படுத்தி நீங்கள் அவருக்கு அதிகூடிய அரசியல் ஆணையையும் கொடுத்தால் கிழக்கின் முதலமைச்சராக இந்த மாகாணத்துக்கே அவரைக் கொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.’ என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான .எச்.எம். பௌஸி அவர்கள்,

அரசு நீண்ட காலப் பயங்கரவாதப் போரில் வெற்றியீட்டியதற்கும் நாட்டிலே நிரந்தர சமாதானம்  ஏற்பட்டதற்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமரின் ஆலோசகரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலி ஸாஹிர் மௌலானா முக்கிய பங்கு வகித்திருக்கின்றார். அவரை முழு நாடுமே இலகுவில் மறந்து விட முடியாது.

நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, சொந்த ஊர், நாடு எல்லாவற்றையும் துறந்து நாட்டிலே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக தனது தனிப்பட்ட வாழ்வைக்கூட அர்ப்பணித்தார். அதனால்தான் இப்பொழுது தமிழர்களும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் நாட்டின் எந்தப் பாகத்திலும்  நிம்மதியாகப் பயணம் செய்ய தொழிலுக்குச் போக, பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல, நிம்மதியாகத் தூங்க முடிகிறது. அலிஸாஹிர் மௌலானாவை கிழக்கின் அமைச்சராக மட்டுமல்ல, முதலமைச்சராகவும் மத்திய அமைச்சின் முழு அமைச்சராகவும் நீங்கள் ஆக்க வேண்டும்.’ என்றார்.

நிகழ்வில் தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரட்னாயக்க, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராஆகியோரும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
kattankudi.info

No comments:

Post a Comment