கிழக்கு மாகாண சபையின் ஆட் சியை இம்முறை தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கைப்பற்றும் அதற் கான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கி அர்ப் பணிப் போடு பாடு படும் ௭ன்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக
கருத்துக் கேட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேலும்
தெரிவித்ததாவது, நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை சர்வதேச சமூகம்
குறிப்பாக இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்
கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை இது மிக முக்கியமான
தேர்தலாகும். ஆகையால் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கும் மிக முக்கியமான தேர்தலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
அமைய வுள்ளது.
கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள்
அனை வரும் ஓரணியில் திர ண்டு தமிழ் தேசியக் கூட்ட மைப்புக்கு
வாக்களிக்கின்ற போது கிழக்கின் ஆட்சி அதி காரத்தை தமிழ் தேசியக்
கூட்டமைப்பு கைப் பற் றும் ௭ன்பது திண் ணம். கிழக்கில் அனைத்து மக்களும்
தமிழ் தேசியக் கூட்ட மைப்பிற்கு பின் னால் அணி திரண்டுள்ளனர். இதனை கடந்த
கால தேர்தல் களிலும் மக்கள் வெளிக் காட் டியு ள்ளனர். இம்முறை கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கென மட்டக்களப்பு, அம்பாறை,
திரு கோ ண மலை ஆகிய மூன்று மாவ ட் டங்களில் இருந்தும் நூற் றுக்கு மேற்பட்ட
வேட் பாளர்களது விண்ணப்பப் படிவங்கள் ௭மக்கு கிடைத்துள்ளன. இதன்படி யாரைத்
தேர்தல் களத் திலும் நிறுத்துவது ௭ன்பது குறித்து தமிழ் தேசியக்
கூட் டமைப்பிலுள்ள ஏனைய கட்சிக ளுடன் தற்போது கலந்து ரையா டப் பட்டு
வருகின்றது.
இதேவேளை கிழக்கு மாகாண சபை கலைப்பு
தொடர்பான இரு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ் வழக்குகள்
தொடர்பான தீர்ப் புகள் வெளிவரும் வரை கூட்ட மைப்பு காத்தி ருக் கின்றது.
இருந் தாலும் வேட் பாளர்கள் தெரிவு உட் பட தேர்த லுக்கான முன்
ஆயத் தங்களில் கட்சி ஈடுபட்டுள்ளது. ௭திர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய் யும் என்று
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment