கடந்த 3 தசாப்தங்களுக்கு
மேலாக கல்முனை மாநகரில் மூடப்பட்டிருந்த வீதியொன்றினை மீண்டும் திறந்து பொது மக்களின் பாவனைக்கு விடும் செயற்பாடொன்று தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பாரிய இயந்திரங்களின்
உதவியுடன் பாதையினை திறப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை பொலிஸ்
வீதிக்கும் , பிரதான வீதிக்கும் இடையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலிருந்த
வீதியொன்றினையே தற்போது திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கல்முனை மாநகரசபையும்
, இலங்கை
ஒற்றை வழிப்பாதையாக
காணப்படும் கல்முனை பொலிஸ் வீதியினால் பயணிக்கும் ஒருவர் பிரதான வீதியினை சென்றடைவதற்கு
அதிகளவு தூரம் சுற்றிவளைக்க வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்கள் அதிக நேரவிரயத்தினை
இதற்காக செலவிடவேண்டியுள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் வீதி திறப்பு நிகழ்வின் மூலம்
கல்முனை பஸ் நிலையத்திலிருந்து கல்முனைக்கு வரும் பயணிகளும் , தூர இடங்களுக்கு கல்முனை
நகரில் இருந்து பயணிக்கும் பொதுமக்களும் இலகுவாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்
என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment