Wednesday, January 30

அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேறு; இல்லையேல் கட்சியில் இருந்து வெளியேற்றுவோம்; பஷீருக்கு ஆப்படிக்க திட்டம்!



Presentation1ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீடக் கூட்டம் அவசரமாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கூட­வுள்ள நிலையில், கட்சி­யின் அனுமதியின்றி அமைச்சுப் பதவியைப் பெற்ற கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்க முஸ்தீபு செய்யப்பட்டு- அதற்­கான வியூகங்கள் இரகசிய­மான முறையில் முடுக்கிவிடப்­பட்­டுள்ளன எனத் தெரிய வரு­கின்­றது.
இது தொடர்பில் கட்சியின் மிக முக்கியமான சிலர் நேற்று ­முன்தினம் கூடி ஆராய்ந்துள்­ள­னர் என அறிய முடிகின்றது.

இதன் பிற்பாடே கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தியாவிலிருந்தவாறு செயலாளர் நாயகம் ஹசனலி­யுடன் தொடர்பு கொண்டு வெள்ளிக்கிழமை அதியுயர்பீடக் கூட்­டத்தைக் கூட்டுமாறு பணித்த­தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது கட்சியினதும், தலைமையினதும் அனுமதி­யின்றி பிரதியமைச்சர் பதவியை பஷீர் சேகுதாவூத் இராஜிநாமாச் செய்து தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததிலிருந்து நேற்று முன்­தினம் வரை அவ்வாறான நெருக்­கடிகளைத் தொடர்ந்தும் செய்து வந்துள்ளார்;
இனியும் இவர் விடயத்தில் பொறுமை காக்கக்கூடாது என்று கட்சியின் பெரும்பாலான உயர்பீட உறுப்­பினர்கள் தலைவர் ரவூப் ஹக்­கீமை வலியுறுத்தத் தொடங்கி­யுள்­ள­னர்.
மட்டு. மாவட்டம் மு.காவி­ட­மிருந்து விலகிச்செல்வதற்கு பஷீர் சேகுதாவூதே காரணம் என்­றும் அவரை உடனடியாகக் கட்­சியிலிருந்து இடை­நிறுத்த ­வேண்­டும் என்றும் மேற்படி உறுப்பினர்கள் தலைவரிடம் வலியுறுத்திக் கேட்டுள்ள­தாக­வும் அறிய முடிகின்றது.
இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையிலேயே நாளை மறுதினம் உயர்பீடக் கூட்டம் இடம்­பெறவுள்ளது. இக்கூட்­டத்­­தின் இறுதியில் பஷீர் சேகு­தாவூதை அமைச்சுப் பதவியிலி­ருந்து விலகுமாறு கோருவது என்றும் அதனை அவர் மறுக்கும் பட்சத்தில் அன்றே அவரை கட்­சியிலிருந்து நீக்கும் முடிவை எடுப்­பதென்றும் தீர்மானிக்கப்­பட்டுள்ளதாக உயர்பீட உறுப்பி­னர் ஒருவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, அமைச்­சர் பஷீர் சேகுதாவூதின் தனிப்­பட்ட ஆளணியில் கட்சி உறுப்­பினர்கள் எவரும் இணைந்து­கொள்ளக்கூடாதென மு.கா. கண்டிப்பான உத்தரவை பிறப்­பித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
அத்துடன், ஏனைய மு.கா. எம்.பிக்கள் தாங்கள் என்றும் தலைவர் ரவூப் ஹக்கீமுட­னேயே இருப்போம் என்ற உறுதி­மொழியை வழங்கியுள்ள­தாகவும் தெரிவிக்கப்படுகின்­றது.

No comments:

Post a Comment