(அகமட் எஸ் முகைடீன்)
சம்மாந்துறை நெல்லுப்புடி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சம்மாந்துறை மத்திய வீதியில் வசிக்கும் முஹம்மட் அலியார் (ஜே.பி) 74 வயதுடைய ஓய்வு பெற்ற மலேரிய தடுப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டி மற்றும் ரம்ரெக் (ஆளடியன்) வாகன விபத்தில் மரணித்த நபர் மாவடிப்பள்ளியிலிருந்து மாட்டிறைச்சி வாங்கிக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் சம்மாந்துறை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் நெல்லுப்புடி சந்தியில் பின்னால் வேகமாக வந்த ரம்ரெக் (ஆளடியன்) வாகனம் முட்டியதனால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment