Tuesday, February 19

கிழக்கு மாகாண மாணவர்களிடம் பணம் அறவிடத் தடை – முதலமைச்சர்


T1கிழக்கு மாகாண பாடசாலைகளில் பெரும்பாலானவை கிழக்கு மாகாண அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் உள்ள நிலையில், அவ்வாறான பாடசாலைகளுக்கான நிதி மாகாண அரசாங்கத்தால் முறையாக வழங்கப்பட்டுவருகின்றன.
எனினும் பாடசாலை நிர்வாகத்தினால் மாணவர்களிடம் பணம் அறவிடப்பட்டு வருகின்றது.
இதனை எக்காரணத்தை கொண்டும் தம்மால் வரவேற்க முடியாது எனவும், உடனடியாக பணம் அறவிடும் நடைமுறை நிறுத்தப்படவேண்டும் எனவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நிர்வாகத்தினால் மாணவர்களிடம் பணம் அறவிடப்படுதலுக்கு எதிரான மீள் சுற்றுநிரூபம் ஒன்று விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், தொடர்ந்தும் மாணவர்களிடம் பணம் அறவிடப்பட்டால், குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment