Monday, February 18

காரைதீவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி


(அப்துல் ஜப்பார்)
கல்முனை காரைதீவு பிரதான வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எம்.எல்.எம்.நஸீர் (வயது-34) எனும் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவு மக்கள் வங்கி முன்பாக இவ்விபத்து இடம்பெற்றது. முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலைக் கவசம் அணிந்திருந்ததால் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்; அத்துடன் அவருடைய நெஞ்செலும்பு முறிவடைந்த நிலையிலேயே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment