Saturday, February 23

முஸ்லிம்களது பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் முஸ்லிம்களது பாதுகாப்பு குறித்து காத்தான்குடியில் கலந்துரையாடல்

முஸ்லிம்களது பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்
February 23, 2013  01:04 pm
காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினருக்கும் சவூதி அரேபிய பிரமுகர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (22) மாலை காத்தான்குடி சம்மேளனக் காரியாலயத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் தற்கால நிலையில், முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களால் சம்ளேனத்துக்கு 50ஆயிரம் ரூபா அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் நிதாஉல் கைர் நிறுவனத்தின் தலைவரும் பொதுநலன் விரும்பியுமான அபூ ஸாலிஹ் ஹாலித்தாவூத், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஹஸனுஷ்ஸெய்க், அஷ்-ஷெய்க் நாயிப், அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி பள்ளிவாயலில் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ்(மதனி)இகாலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி விரிவுரையாளர், பிரதித் தலைவர் அப்துல் ஜவாத் பீ.ஏ.சம்மேளனச் செயலாளர் அப்துல் காதர் (பலாஹி) சம்மேளன உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment