அதிபர் தரம் 1ஐ வகிக்கும் கல்வி முதுமாணிப் பட்டதாரியான இவர் மூதூரைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வதிவிடமாகவும் கொண்டவராவார்.
1975ஆம்
ஆண்டு மூதூர் பெரிய பாலம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் கணித விஞ்ஞான
ஆசிரியராக நியமனம் பெற்;று தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்த இவர், கல்முனை
ஸாஹிறா தேசிய பாடசாலையின் உதவி அதிபராகவும், அல்பஹ்ரியா
மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் பின்னர் அதிபராகவும்
கடமையாற்றியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்ட இவர்
கல்முனை
மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பாக பல மாதங்களாக
இடம்பெற்ற இழுபறி நிலைக்கு மத்தியில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தகக்கது.
No comments:
Post a Comment