-காரைதீவு நிருபர்-
வடக்கு மாகாணத்தைப் போல் கிழக்கு மாகாணத்திலும் ஆசிரிய ஆலோசகர் மற்றும்
ஆசிரிய உதவியாளர்களது மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை வாரியத்தின்
மூலம் துரித நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ்
நஜீப் எ மஜீத் தன்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய இலங்கைத்
தமிழர்ஆசிரியர் சங்கத்திடம் உறுதியளித்தார்.
முதலமைச்சருடனான இக்கன்னிச் சந்திப்பு திருகோணமலையிலுள்ள முலமைச்சர்
காரியாலயத்தில் நேற்று (20.03.2013) புதன்கிழமை மாலை ஒன்றரை மணிநேரம்
நடைபெற்றது. கிழக்கில் நிலவும் கல்வி தொடர்பான நீண்டகால பிரச்சினைகள் பல
கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் சமுகமளித்திருந்தார்.
இலங்கைத் தமிழர்ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர்
வி.ரி.சகாதேவராஜா நிருவாகச்செயலாளர் கே.நல்லதம்பி துணைப் பொதுச் செயலாளர்
எஸ்..சசிதரன் பட்டிருப்புவலயச் செயலாளர் எஸ்.கமலேஸ்வரன் மட்டக்களப்பு
மாவட்டச் செயலாளர் எஸ்.அருணாசலம் மட்டு.மேற்கு கோட்டச் செயலாளர் எஸ்.
தியாகரெட்ணம் போரதீவுக் கோட்டச் செயலாளர் கே.தனுராஜ் பட்டிருப்புவலயப்
பொருளாளர் எஸ்.வரதராஜன் திருமலைப் பிரதிநிதி கே.யோகநாதன் மற்றும்
யோ.கோபிகாந் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் இதுபற்றி
கருத்துரைக்கையில்; சங்கத்தின் நியாயமான கோரிக்கை இது. நீண்ட காலப்
பிரச்சினை.
எனவே அமைச்சரவை வாரியத்தினுடான ஒரு தீர்மானத்தை எடுத்து எமக்கு கட்டளை பிறப்பித்தால் நாம் அதனை வழங்குவோம் என்றார்.
அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்கள் வருமாறு
ஆசிரியர் இடமாற்றம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய தொன்றாக இருந்து
வருகிறது. ஆசிரிய இடமாற்ற சபையின் தீர்மானமின்றி எந்த ஆசிரிய இடமாற்றமும்
இடம்பெறக் கூடாது.
மாகாணங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக் கேற்ப புதிய ஆசிரியர்களை
உள்ளீர்த்து வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும்.
மட்டக்களப்பு மேற்கு வலயம் திருக்கோவில் கல்குடா பட்டிருப்பு போன்ற
வலயங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும் எனக் கோரியதற்கு
நிச்சயமாக நியமிப்போம் என்றனர்.
அண்மையில் பட்டதாரிகளுக்கு நடாத்தப்பட்ட ஆசிரியர் தெரிவுக்கான போட்டிப்
பரீட்சையின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டாமல் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான
நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தைத் தருகிறது.
புள்ளிகள் அறிவிக்கப்பட்டு நியமனத்தின்போது பகிரங்கத்தன்மை நீதி நியாயம்
பேணப்பட வேண்டும் எனச் சங்கம் கேட்டதற்கு தற்சமயம் அதனை நிறுத்தி
வைத்துள்ளோம். புள்ளிகளை வெளியிட்டதன்பிறகு வெட்டுப் புள்ளியை அறிவித்த
பிற்பாடே நேர்முகப் பரிட்சை நடாத்தி நியமனம் வழங்கப்படும் என்று
பதிலளித்தார்.
முதலாம் தவணைப் பரீட்சை பாடசாலை மட்டத்தில் அன்றி வலய மட்டத்தில் நடாத்தப்படக் கூடாது.
மேலும் அம்பாறையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறவிருப்பதால்
மாணவர் ஆசிரியர் அதிபர் உள்ளிட்டோர் இக்கண்காட்சியில் பங்கெடுப்பது முதல்
கண்காட்சியைப் பார்வையிடுவது வரை சம்பந்தப்படுகிறார்கள். முதலாம் தவணைப்
பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ஏககாலத்தில் எல்லா வலயங்களிலும் ஒரே
நேர அட்டவணையின் கீழ் பரீட்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனச்
சங்கத்தினர் கோரினர்.
பதிலளித்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம்; முதலாம்
தவணைப் பரீட்சை பாடசாலை மட்டத்திலும் இரண்டாம் தவணைப் பரீட்சை வலய
மட்டத்திலும் மூன்றாம் தவணைப் பரீட்சை மாகாண மட்டத்திலும் நடாத்தப்பட
வேண்டும் என்று நாம் அறிவித்திருக்கிறோம்.
சிலர் நிகம்பு போனற் பிற பிரதேச பத்திரங்களையும் சிலர் வலய மட்டத்திலும்
முதலாம் தவணைப் பரீட்சையை நடாத்துவது இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டாது.
கண்காட்சியையொட்டி பரீட்சை நடாத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவெடுத்து அறிவிப்போம் என்றார்.
ஞாயிறு மற்றும் போயா போன்ற பகிரங்க விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு
கருத்தரங்கு வைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஞாயிறு காலைப்
பொழுதில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால்
பிரத்தியேக வகுப்புகள் அப்பொழுதில் நடாத்தப்படுதலை தடை செய்ய வேண்டும் எனக்
கேட்டதற்கு மாகாண ரீதியாக இவ்வறிவித்தலை விட நான் தயாராகவிருக்கிறேன் எனப்
பதிலளித்தார்.
ஆசிரிய ஆலோசகர்கள் இல்லாமல் மட்டக்களப்பு மேற்கு வலயம் உள்ளன. இது
வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைப் பாதிக்கின்றது. இ.ஆ.சேவை தரம்
2-1 வகுப்பைச் சேர்ந்தவர் அவ்வலயத்தில் இல்லாத விடத்து 2-2 தரத்தைச்
சேர்ந்தவர்களை நியமித்து வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.
மட்டு.மேற்கு வலயத்தில் கணக்காளர் ஒருவர் இல்லை. 123 ஆசிரியர் அங்கு
தேவை. தளபாடப் பற்றாக்குறை நிலவுகிறது. போதிய ஆளணி மற்றும்
ஆசிரியஆலோசகர்கள் இல்லை. இவற்றை வழங்க வேண்டும் எனச்ச ங்கத்தினர்
கேட்டனர்.
பதிலளித்த பணிப்பாளர் நிசாம்; இறுதியாக மட்டு.மேற்கு வலயத்தில் நடைபெற்ற
முதல் வலய கல்விப்பணிப்பாளர்களது கூட்டத்தில்வைத்து இதற்கான அங்கீகாரத்தை
சகல வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் வழங்கியுள்ளேன்.
தற்போது எந்த வலயத்திலும் இக்குறைபாடு இருக்காது. அதுபோல உதவிக் கல்விப்
பணிப்பாளர் நியமனத்தையும் அவர்களது சிபார்சோடு முன்வைத்தால் இன்றே
நியமனத்தை வழங்குவோம் என்றார்.
3ம் வகை பாடசாலைகளுக்கு அதிபர்களை அந்தந்த வலயக் கல்வி பணிப்பாளர்களும்
2ம் வகை பாடசாலைகளுக்கு அதிபர்களை மாகாணக் கல்விப் பணிபப்hளரும் பெரிய 1
எபி 1சி பாடசாலைகளுக்கு அதிபர்களை கல்விச் செயலாளரும் நியமிக்கலாம்
என்றார்.
கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கும் இந்நடைமுறை பொருந்தும்.
கல்குடா வலயத்தில் 4000 தளபாடங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை
சீர்செய்ய வேண்டு மென்று கேட்டதற்கு கிழக்கு மாகாணத்திற்கு தளபாடத்
திருத்தத்ற்கு என 50 லட்ச ருபா ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய தளபாட செற் ஒன்றுக்கு ருபா 5ஆயிரம் செலவாகும். அந்த பணத்தில் 10
செற் தளபாடங்களை திருத்த முடியும். எனவே இப்புதிய திட்டத்தின்கீழ் அது
நிவர்த்தியாகும்.
மட்டு.மேற்கு வலயத்தில் புதிதாக 04 பாடசாலைகள் திறப்பதற்கு அங்கீகாரம்
இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதனை வழங்க வேண்டும் என்று சங்கம் கேட்டது.
உடனடியாக அவ்விபரத்தைத் தாருங்கள் அதனைச் செய்வோம் என்று முதலமைச்சரும் பணிப்பாளரும் உறுதியளித்தனர்.
உடனடியாக அவ்விபரத்தைத் தாருங்கள் அதனைச் செய்வோம் என்று முதலமைச்சரும் பணிப்பாளரும் உறுதியளித்தனர்.
ஆசிரிய தொழிற்சங்க உறுப்பினர்கள் மாணவர் மற்றும் ஆசிரியர்களின்
கல்வியுள்ளிட்ட இன்னோரன்ன நலன்களில் ஈடுபடுகின்ற போது அவர்களுக்கு அப்பகுதி
கல்வி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மாறாக அவர்களை எதிரி என நினைத்து
இடையூறு விளைவிக்க முனையக் கூடாது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் மாகாண ஆளுநருக்கு
அறிவிக்க உள்ளோம். நடவடிக்கையின்றேல் போராட்டத்திலிறங்க
நிர்ப்பந்திப்படுவோம் என்று கூறியதற்கு விரைவில் இப்பிரச்சினைக்கு
பேசிதீர்வு காணவுள்ளதாக பணிப்ப்hளர் நிசாம் தெரிவித்தார்.
முதலமைச்சரும் இத விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும என்றும் கேட்டுக் கொண்டார்.
பாடசாலை சிற்றுழியர்கள் நியமிக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுகிறது.
அந்நியமனத்தை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்தல் நலமாகும எனக் கேரிக்கை
விடுக்கப்பட்டது.
முதலமைச்சர் பதிலளிக்கையில் விரைவில் சிற்றூழியர்களை நியமிக்கவுள்ளோம்.
ஆனால் ஒரு வலயத்திற்கு 05 பேர் வீதமே நியமிக்க முடியும். அதற்குத்தான்
அங்கீகாரமுள்ளது என்றார்.
அது போதாது பெரும்பாலான பாடசாலைகளில் கணிணி முதல் பெறுமதியான பொருட்கள்
உள்ளன.எனவே காவலாளியாவது கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என் சங்கம்
கேட்டுள்ளது.
ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்காக பட்டமேற்படிப்பு கற்கைகளை மேற்கொள்ள
படிப்புலீவு மறுக்கப்படுகிறது. இதனைச் சீர்செய்ய வேண்டும். அதில் எந்தத்
தடையுமில்லை உரிய முறைப்படி விண்ணப்பித்தால் அதனைச் செய்யலா மென்றார்
பணிப்பாளர் நிசாம்.
புதன்கிழமை அலுவலக நாளாகவிருப்பதால் அன்றைய தினம் அதிகாரிகளை சந்திக்க
பொதுமக்கள் வருவர். எனவே அன்றைய தினம் அலுவலக கூட்டங்களை நடாத்துவது, விழா
நடாத்துவது அல்லது வெளிவாரி மதிப்பீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் எனச்
சங்கம் கேட்டதற்கு இது முற்றிலும் சரியானது. நான் இதனை எனது அலுவலகத்தில்
செய்துள்ளேன். ஏனைய வலயத்திற்கும் கூறியுள்ளேன் என்றார் நிசாம்.
மாணவர்களது பொதுவான போட்டிகள் மற்றும் பரீட்சைகள் அண்மைக் காலமாக
மிகவும் குறுகிய காலத்துள் வாய் மொழிமூலம் அறிவிக்கப்பட்டு அரைகுறையாக
நடாத்தப்படுவது அதன் நோக்கத்ததையே பாழாக்கிவிடுகிறது.
எனவே போதிய கால அவகாசத்தை வழங்கி மாணவர்களை உரிய முறையில் தேர்ந்தெடுத்து போதிய பயிற்சியை வழங்கி அவற்றுக்கு அனுப்பவேண்டும்.
ஆசிரிய வருடாந்த சம்பள உயர்ச்சி என்பது ஆசிரியரின் உரிமை. ஆனால் இதனைப்
பெறுவதில் சில வலயங்கள் ஏகப்பட்ட படிவங்களை வழங்கி சிக்கலாக்குகின்றது.
இதனை பொதுமைப்படுத்த வேண்டும்.
பதவியுயர்வு வழங்கப்பட்டால் அதற்கான சம்பளத்தை நிலுவையுடன் வழங்க
வேண்டும். வெளிவாரி மதிப்பீடு கெடுபிடியின்றி நடாத்தப்படவேண்டும்.
தரக்குறைவாக ஏசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.ஆசிரியர் கௌரவத்துடன்
நடாத்தப்பட வேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு ஆவன செய்யப்படுமென்றார் நிசாம்.
வெளி மாவட்டங்களிலிருந்து கற்பிக்கவரும் ஆசிரியர்களுக்க விசேட அலவன்ஸ்
வழங்க நடவஎக்கை எடுக்கப்படுமா என்று குழுவினர் கேட்டதங்கு பணிப்பாளர்
நிசாம் பதிலளிக்கையில் இது நியாயமான கோரிக்கைதான்.கஸ்டப் பிரதேச
கொடுப்பனவுக்கு 18 வீதம் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுகிறது.
உண்மையில் கஸ்டத்திற்கான கொடுப்பனவு பாடசாலையை மையமாகக் கொள்ளாது.
ஆசிரியரை மையமாகக் கொண்டு வழங்கபப்ட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கை
முற்றிலும் நியாhமானதே. நான் பூரண சம்மதம்.. ஆனால் இது தேசிய கொள்கை.
அங்குதான் மாற்றம் ஏற்படுத் வேண்டும். எனினும் மாகாணத்திற்கென ஒரு தொகையை
சங்கம் கூறிய வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வழங்க மாகாண சபைக்கு முடியும்
என்றார்.
முதலமைச்சர் நஜிப் எ மஜீட் இறுதியாக இங்கு கூறுகையில் உண்மையில் இன்று இச்சங்கத்தையிட்டு சந்தோசமடைகின்றேன்.
ஆசிரியர் மாணவர் பிரச்சினைகள் மட்டுமல்ல கல்விப் புலத்திலுள்ள நீண்டகாலமாக நிலவிவந்த பல விடயங்களையிட்டு கூறினீhக்ன்.
எதிர்காலத்திலும் பிரச்சனைகள் ஏதாவதிருந்தால் நீங்கள் நேரடியாக என்னிடம்
எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். உங்களுக்கு மிகவும் திறமையான ஆளுமையுள்ள
மாகாண கல்விப் பணிப்பாளரைத் தந்துள்ளோம். பணன்படுத்திக் கொள்ளுங்கள்
என்றார்.
இறுதியாகத் தலைவர் சகா; முதலமைச்சர், பணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
No comments:
Post a Comment