கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள
பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக
இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாரபட்சம்
காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது
உறவினர்களையும் தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து
அமைச்சுக்களினதும் திணைக்களங்களிதும் நேர்முகப் பரீட்சைகளுக்கு அனுப்பி
குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே
ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம்
எனக் கூறி வருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில்
காட்டப்படும் பாரபட்சமானது மன வேதனையளிப்பதாகவும் சுட்டிக்காட்டுவதுடன்,
இந்நிலை தொடருமாக இருந்தால் பாதிக்கப்படும் பட்டதாரி பயிலுனர்கள்
வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment