இந்த
நாட்டு அரசியலமைப்பில் சகலருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த
வாய்ப்புக்களை நிராகரிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. சட்டத்தைக்
கையிலெடுத்துக் கொண்டு எவரும் செயற்படவும் முடியாது.
ஒரு சமூகத்தினரை இலக்கு வைத்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்
செயற்பாடுகளை ஜனாதிபதி, பாதுகாப்பு தரப்பினர் தடுத்து நிறுத்த முடியும்.
அடிப்படை மனித உரிமை மீறப்படுவதை அங்கீகரிக்கவும் கூடாது. சட்டம், ஒழுங்கை
நிலை நாட்டுவது அரசாங்கமொன்றின் பாரிய பொறுப்பாகும். இன்றேல் நாட்டில்
அமைதியின்மை தோன்றக்கூடும்.
ஒரு சில குழுக்களின் அடாவடித்தனங்களை அரசு கை கட்டிப் பார்ப்பது நாட்டு
மக்களின் இருப்புக்கு நல்லதல்ல. எனவே, அரசு தனக்குள்ள அதிகாரங்களைப்
பயன்படுத்த வேண்டும். மத ரீதியான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக
சட்டம், ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மகாநாயக்க தேரர் போல் செயற்படுகின்றார்.
தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்கிறார். இது எமது சமூகத்தின் நலனைப்
பொறுத்த வரை அவ்வளவு நல்லதாக இருக்க முடியாது.
நாட்டிலே தற்போது இடம்பெற்று வரும் இனவாத செயற்பாடுகளை படையினர்
கண்டும், காணாதது போன்று செயற்படுகின்றார்கள். சட்டத்தையும் ஒழுங்கினையும்
சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினால் பிரச்சினைகளே தலைதூக்க
வாய்ப்பில்லை. ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களை சரியான முறையில்
நிறைவேற்றும் பட்சத்தில் இனங்களுக்கிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும்
ஏற்படும். அதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது.
No comments:
Post a Comment