-KRM.றிஸ்கான்-
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்;கிணைப்புக்
குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும்,
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், முஸ்லிம் காங்கிரஸ்
அங்கத்துவத்திற்கான பணிப்பாளர் ஏ.சீ.யஹியாகான், சாய்ந்தமருது பிரதேச
கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்;.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும்
பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் உட்பட
பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வருட சம்பியனாக சன்(மஞ்சள்) இல்லம்
310 புள்ளிகளைப் பெற்று தெரிவானது. இரண்டாம் இடத்தினை மூன்(பச்சை) இல்லம்
244 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.
No comments:
Post a Comment