வெனிசுலா
ஜனாதிபதி ஹூகோ சாவோசின் மறைவுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள
சாய்ந்தமருதில் அனுதாப பதாதை பறக்கவிடப்பட்டிருக்கிறது. சுனாமியால்
பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு இதே வெனிசுலா அரசாங்கம் வொலிவேறியன்
கிராமம் எனும் பெயரில் ஒரு வீடமைப்புத் தொகுதியொன்றை அமைத்துக்
கொடுத்திருந்தது.அந்த மக்கள் நன்றி மறவாமல் இப்பதாதையை
தொங்கவிட்டிருக்கிறது. நன்றியுள்ள மனிதன் இன்னமும் இப் பூவுலகத்தில்
வாழ்கின்றான் என்பதற்கு இது நல்ல உதாரணம் அல்லவா?
No comments:
Post a Comment