திருகோணமலை கந்தளாய் பேராற்று வெளி முஸ்லிம் மகாவித்தியாலம் மற்றும் ஆயிஷா
மகளிர் பாடசாலைகளுக்குரிய நூல்நிலையங்களை புனரமைத்து அவற்றிற்குத் தேவையான
பெறுதிமிக்க பல நூல்கள்,தளபாடங்கள் மற்றும் மின்சார உபகரணங்களுடன் முஸ்லிம்
எய்ட் சிறிலங்கா மார்ச் 12ம் திகதி பாடசாலை சமூகத்திடம் அன்பளிப்புச்
செய்துள்ளது.
இந் நிகழ்வில் முஸ்லிம் எய்ட் இன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, வலயக் கல்விப் பணிப்பாளர்,கல்வித்திணைக்கள் உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் ரெக்டோ (RECDO) அமைப்பின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் (Muslim Aid Srilanka) அதன் பங்காளர் அமைப்பான ரெக்டோ (RECDO) உடன் இணைந்து கடந்த ஆறு வருடங்களாக ‘வானவில் குடும்பம்’- Rainbow Family Program எனப்படும். அநாதரவான வறிய சிறார்களின் கல்வி மற்றும் உள உடல் விருத்திகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக நூல்நிலையங்களை செம்மைப்படுத்திப் பூரணத்துவப்படுத்தும் இச்செயற்திட்டம் அமைகின்றது. மேற்படி வானவில் குடும்பத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சிரார்கள் கல்வி கற்கும் இரண்டு பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பாடசாலைகளிலுள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் பயனடையும் விதத்தில், அங்குள்ள நூல்நிலையங்கள் முற்றாகப் புனரமைக்கப்பட்டு அவற்றிற்கு அவசியமான நூல்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கப்பட்டுப் பூரணப்படுத்தப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. சுpறப்புரை ஆற்றிய முஸ்லிம் எய்ட் சிறிலங்கா வதிவிடப் பிரதிநிலை பைசர்கான் அவர்கள்,“கிராமப்புறத்திலுள்ள ஒரேயொரு மகளிர் பாடசாலைக்கு இந் நூல் நிலையத்தை அன்பளிப்புச் செய்வதில் முஸ்லிம் எய்ட் திருப்தியடைகின்றது. எதிர்காலத்தில் சிறிந்த பெண்கள் சமுதாயம் உருவாவதற்கு இந் நூல்நிலையம் பங்களிக்கும் என நாம் நம்புகின்றோம். ஆசிரியர்களும் தாய்மாரும் சிறந்த வழிகாட்டலை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஓவ்வொரு மாணவியும் தமது பிறந்தநாளுக்கு ஒவ்வொரு நூலினை வாங்கி இந்நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்வதன் மூலமாக மிகவும் குறுகிய காலத்தில் இந்நூல் நிலையம் சிறந்த அறிவுச் சாலையாக மாறும்” என்றார்.
இது போன்ற மேலும் ஒரு நூல்நிலையம் 13.03.23013ஆம் திகதி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கையிக்கப்படவுள்ளது. முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் இத்திட்டத்தினை ஹியுமன் எய்ட் அமைப்பு பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுத்தியுள்ளது.
பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த வறிய, அநாதரவான சிறார்கள் தமது குடும்பங்களுக்கோ அன்றி தாம் வாழும் சமூகத்திற்கோ ஒரு சுமையல்ல,மாறாக அவர்கள் இறைவனால் அருளப்பட்ட கொடையாகும். இவர்களின் ஊடாக குறிப்பிட்ட சிறார்களின் குடும்ப உறுப்பினர்களும், இச்சிறார்கள் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களும் வானவில் குடும்ப சிறார்கள் வாழும் சமூகமும் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்வது இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டு இலக்காகும். இதன் மூலமாக அநாதரவான சிறார்களுக்கு அவர்கள் வாழும் சூழலில் இருந்து முழுமையான கௌரவம் அளிக்கப்படுவதை ஊக்குவிப்பது இத் திட்டத்தின் குறிக்கோளாகும்.

No comments:
Post a Comment