மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
06மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தீவிர விபத்துச்சேவை சிகிச்சைப்பிரிவு
ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவுஸ்திரேலியாவில் உள்ள விஷேட எலும்பு
முறிவுச் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் யங் தலைமையிலான விஷேட
குழுவினர் இதற்காக முன்வந்துள்ளதுடன் 200மில்லியன்களை நிதியுதவியாகப்
பெற்றுக்கொள்ள உலகலாவிய ரீதியில் வர்த்தக சமூகத்திடமிருந்து
நிதிசேகரிக்கப்பட்டுவருகின்றது.
இது தொடர்பாக ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் நேற்று
வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் பொன் செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட வைத்திய நிபுணர்கள், வர்த்தகர்கள் சிவில்சமூக
பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் விபத்துக்கள் அவசர பிரிவு தனியாக அமைக்கப்படுவதற்கான வெலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நான்கு மாடிகளைக் கொண்டதாக
அமைக்கப்படவுள்ள இவ்விபத்து சேவைப்பிரிவின் கீழ்த் தளத்தில்
விபத்துக்குள்ளாவோர் நோயாளர் பிரிவு, வைத்தியர் ஒய்வு அறை என்பன
அமையப்பெறுவதுடன் இரண்டாம் மாடியில் 50படுக்கைகளைக் கொண்ட பெண்களுக்கான
விடுதியும், நான்காம் மாடியில் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில்
நான்கு சத்திரசிகிச்சை கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்த நிர்மாணப்பனிகளுக்காக 06 மில்லியன்
அமெரிக்க டொலர் தேவையாக உள்ள நிலையில் 4மில்லியன் டொலர் கட்டடத்திற்கும்
02மில்லியன் டொலர் உபகரணங்களுக்கும் செலவு செய்யப்படவுள்ளது.
கட்டடத்திற்கான 04 மில்லியன் டொலரில் 02 மில்லியன் டொலரினையும் உபகரணத்திற்கான 02 மில்லியன் டொலரில் 01 மில்லியன் டொலரினையும் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. மிகுதி 03 மில்லியன் டொலரில் 02 மில்லியன் டொலரினை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் யங் தலைமையிலான அமைப்பினர் வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையில் மிகுதி 01 மில்லியன் டொலரினை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்டடத்திற்கான 04 மில்லியன் டொலரில் 02 மில்லியன் டொலரினையும் உபகரணத்திற்கான 02 மில்லியன் டொலரில் 01 மில்லியன் டொலரினையும் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. மிகுதி 03 மில்லியன் டொலரில் 02 மில்லியன் டொலரினை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் யங் தலைமையிலான அமைப்பினர் வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையில் மிகுதி 01 மில்லியன் டொலரினை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
எமது மாவட்டத்தில் அமையப்பெறவுள்ள இந்த
வைத்தியசாலையினை எமது மாவட்ட மக்களே முழுமையாக பயன்படுத்தவுள்ளதால் இதற்கான
பங்களிப்பினை எமது வர்த்தகர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும்
எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.
முருகானந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment